உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர்கள் எதிர்காலம் தி.மு.க., அரசுக்கு விளையாட்டாக போய்விட்டதா: கேட்கிறார் அண்ணாமலை

இளைஞர்கள் எதிர்காலம் தி.மு.க., அரசுக்கு விளையாட்டாக போய்விட்டதா: கேட்கிறார் அண்ணாமலை

சென்னை: '' தங்கள் கடின உழைப்பைக் கொடுத்து, காவல்துறை பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம், தி.மு.க., அரசுக்கு விளையாட்டாகப் போய்விட்டதா?,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2023ம் ஆண்டுக்கான, தமிழகக் காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கியதில், பல்வேறு குழப்பங்கள், முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக, இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அதில் இருந்து நீக்கப்பட்ட எழுப்பியிருக்கின்றனர். இளைஞர்கள் குற்றச்சாட்டு எழுப்பியிருக்கின்றனர்.கடந்த 2023ம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி அன்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெற்றது.நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு, கைரேகைப் பதிவு உள்ளிட்டவை,அவர்களுக்கான கல்விச் சான்றிதழ் மற்றும் நடத்தை சான்றிதழ் உள்ளிட்டவை சரிபார்க்கும் பணிகளும் நடந்து முடிந்துள்ளன.இந்த உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வில், இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றுமாறு, சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பளித்தது. தீர்ப்பின் அடிப்படையில், கூடுதலாக, 370 தேர்வாளர்களுக்குக், உடற்தகுதித் தேர்வு நடைபெற்று, அவர்களில், 202 பேருக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக இறுதித் தேர்வாளர்கள் பட்டியல், வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில், முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் இருந்த 41 தேர்வாளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. முதல் இறுதிப் பட்டியலில், தேர்வு செய்யப்பட்டவர்களின், எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண், துறை சார்ந்தவர்களுக்கான சிறப்பு மதிப்பெண், பிறந்த தேதி, அவர்கள் சார்ந்த சமூகப் பிரிவு உள்ளிட்டவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் மூலம், இந்தத் தேர்வு முடிவுகள் வெளிப்படையாக அமைந்திருந்தன.ஆனால், திருத்தப்பட்ட இறுதிப் பட்டியலில், தேர்வாளர்களின் பதிவு எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. எதன் அடிப்படையில், இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. இதனால், முதல் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 41 இளைஞர்கள், முறையான விளக்கம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து, இறுதிப் பட்டியலில் தேர்வு பெற்றவர்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடக் கோரி,சென்னை உயர்நீதிமன்றத்தில், தொடரப்பட்ட வழக்கில், காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்களின், பெயர், பிறந்த தேதி, மதிப்பெண்கள், சமூகப் பிரிவு உள்ளிட்ட 15 விவரங்களையும் இறுதிப் பட்டியலில் வெளியிடுமாறும், அதுவரையிலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இறுதிப் பட்டியல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தீர்ப்பு அளித்தது. ஆனால், சுமார் நான்கு மாதங்கள் ஆகியும், இன்று வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளாக, காவல்துறை பணிக்காகத் தங்களைத் தயார் செய்து, அனைத்துத் தேர்ச்சி முறைகளிலும் வெற்றி பெற்று, பணி ஆணை பெறக் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும், முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிடத் திமுக அரசு தயங்குவது ஏன்?அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. அதற்குகாவல்துறை பணிகளும் விலக்கல்ல என்பதுதான், உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிட திமுக அரசு, காலதாமதமாக்குவதன் மூலம் தெரிய வருகிறது. தங்கள் கடின உழைப்பைக் கொடுத்து, காவல்துறை பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம், தி.மு.க., அரசுக்கு விளையாட்டாகப் போய்விட்டதா? திமுக அரசின் தேவையற்ற காலதாமதத்தால், இளைஞர்களின் காவல்துறை பணிக்கான கனவு சிதைந்து போவதை இனியும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Bala
பிப் 18, 2025 17:52

இளைஞர்களின் எதிர்காலம் திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க வளமுடன். 2026 இல் தமிழகத்தில் பாஜக பங்களிப்புடன் கூட்டணி ஆட்சி மலரும். திமுக வீழ்த்தப்படும்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 16:57

திராவிட மதமா?? பாஸ்கரன் மட்டுமல்ல, 98% பாஜக வாசகர்களும் மதவாதம், இனவாதம் தான் எழுதுகிறார்கள். இன்ஸ்பெக்டர் நியமனத்தில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதாக செய்தியில் இருக்கே, பார்க்கவில்லையோ?? இளைஞர் எதிர்காலம் பத்தி இவரு பேசறாரா?


guna
பிப் 18, 2025 17:25

இல்லாத சிக்கலை உருவாக்கி கொள்ளை அடிக்கும் திமுக அபாரம்


பஞ்சநாதன்
பிப் 18, 2025 16:15

2014 லிருந்தே வருஷம் ரெண்டு கோடி வேலை குடுத்து சிரிப்பாய் சிரிச்சுக்கிட்டிருக்கு.


Kasimani Baskaran
பிப் 18, 2025 14:47

திராவிட மதத்தினரின் அரை நூறாண்டு கடின உழைப்புக்கு பலனாக 200 ஓவா, குவாட்டர், மற்றும் பிரியாணிக்கு எளிதாக மனித வளம் கிடைப்பதால் அவர்கள் கவலையெல்லாம் செல்வதை பல மடங்கு அதிகரித்து மன்னராட்சியை எப்படி இடைவெளி இல்லாமல் தொடர்வது என்பதுதான்.


Mahalingam Laxman
பிப் 18, 2025 12:35

sh.sh do not talk aloud. Police comes under TN CM. who said they do not take care of youngsters. They have very well taken care of their children, right or wrong, within or outside policy. why should they worry about other youngsters.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 12:16

இவரு வேற தினம் ஒரு காமெடி பண்ணிக்கிட்டு. Fastag னு பகல் கொள்ளை திட்டம் அராஜகமாக ஆணவமாக அமல் படுத்தும் பாஜக பற்றி அண்ணாமலை ஏதாவது பேசினால் பரவாயில்லை. 1008 சட்ட சிக்கல் இருப்பதால் தான் எஸ் ஐ ரெக்ரூட்மென்ட் தாமதமாறது ன்னு தெளிவா போட்டிருக்கே..


baala
பிப் 18, 2025 11:57

மக்களுக்கு நீங்கள் செய்த சேவை என்ன என்பதை இங்கே சொல்லவும்.


angbu ganesh
பிப் 18, 2025 11:47

முடியே நரைக்காத எங்க முதல்வரை பார்த்த என்ன கேள்வி கேட்டீங்க


N Srinivasan
பிப் 18, 2025 12:54

இல்லை. தப்பு...


ஆரூர் ரங்
பிப் 18, 2025 11:45

சம்பளம் கொடுக்க அரசிடம் நிதியில்லை. அதனால்தான் தாமதம்? மகன் மருமகன் சுருட்டலால் விடியல் அரசு திவால்? முன்னாள் போலீஸ் ஆபீசர் இது தெரியாம அறிக்கை விடுகிறார்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 12:43

மகன் மருமகன் சுருட்டலா?? என்ன ஆதாரம்? சும்மா ஏதாச்சும் அள்ளி வுடறதுக்கு பேர் கருத்தா?? மூணு தலைமுறைகளாக, திமுக ஊழல், சுருட்டல் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்லிண்டே இருக்கீங்க, இருக்காங்க. உண்மையில் சுருட்டல் ராணிகள் ஜெயலலிதா மற்றும் சசிகலா. இவங்க கட்சி தான் அதிமுக. அதனுடன் கூட்டணி வைக்க, பாஜக எல்லா முயற்சிகளையும் எடுத்துண்டிருக்கிறது. திமுக அரசுகள், குறிப்பாக ஸ்டாலினின் அரசு பற்றி பேசவே தகுதியற்றவர் அண்ணாமலை.


ராமகிருஷ்ணன்
பிப் 18, 2025 11:32

திமுகவினர் தங்களின் குடும்பத்தினர் வருமானம் மட்டுமே குறியாக செயல்படுவார்கள். மக்கள் நலன் என்பது திமுகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கும் திட்டம். அதாவது அரசின் காசை வாரி இறைத்து தங்களது ஓட்டுக்காக திட்டம் போட்டு விளம்பரம் செய்வார்கள். இளைஞர் நலன் அவர்களுக்கு ஓட்டாக மாற வாய்ப்பு இல்லை. அதனால் விடியல் அரசு கவனிக்காது.


முக்கிய வீடியோ