உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் மனோ தங்கராஜூக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

அமைச்சர் மனோ தங்கராஜூக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை: 'பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ், தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா' என்று தமிழக பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.அவரது அறிக்கை:கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, 'பொதுமக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது' என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோவில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறும் அளவுக்கு கொழுத்துப் போயிருக்கிறது. எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டு மொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக் கூட விட்டு வைக்காமல் திருடுவதா?இண்டி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ், கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா? தமிழகத்தில் கள்ளச் சாராயமும், கஞ்சாவும், போதைப் பொருள்களும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த அழகில், பகுத்தறிவு பேசுகிறாராம். வெங்காயம்.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Sivasankaran Kannan
ஜூன் 10, 2025 10:18

உங்களை போன்ற திராவிட பிறவிகளால் மட்டும் தான் கஜினி முகமதுல இருந்து, மாலிக் கபூர் வரை நம்மை கொள்ளை அடித்தான்.. நீங்க என்ன சார்.. சொம்பை தூக்கிட்டு திராவிட குடும்ப கும்பலுக்கு 200 ரூபாய் வாங்கிட்டு சேவை செய்ய கெளம்பிடுவீங்க.. கும்ப மேளா பற்றி பேச கூட நூறு ரூபா கிடைக்கும்..


Ganeshan R
ஜூன் 06, 2025 20:14

தமிழகம் முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் சாரயாக் கடைகள் எந்த நாகரீக சமுதாயம் அமைச்சர் அவர்களே? இதுதான் நீங்கள் உருவாக்க நினைக்கும் நாகரீகமா ?


Chandradas Appavoo
ஜூன் 06, 2025 18:32

முட்டாள் தனமான கருத்து பேசுவதை நிறுத்துங்க


KUMARAN TRADERS
ஜூன் 06, 2025 17:26

வேறு இவரது ஒரு நாலு பேரு மட்டும் போயி செருப்ப எடுத்துட்டு போய் அடிச்சிருக்கலாமே அப்பா இந்த திட்டு திட்டு இருக்கீங்க அதுக்கு இந்த மாதிரி அடிச்சிட்டு போங்க பேச்சு அவரை பேசுவதற்கு பதிலாக


கூறு கெட்டவன்
ஜூன் 06, 2025 16:56

விசமத்தனமான பேச்சு. அண்ணாமலை பதிலடி மிக சிறப்பு.


venugopal s
ஜூன் 06, 2025 15:59

அமைச்சர் கிடக்கிறார், அவருக்கென்ன தெரியும்? நீங்கள் கும்பமேளாவில் போய் கும்மி அடித்து விட்டு கூட்ட நெரிசலில் சாவதை தொடருங்கள்!


Gokul Krishnan
ஜூன் 06, 2025 20:02

நீங்க சொன்னது,ஹஜ் யாத்திரைக்கு பொருந்துமா


Venkatesan Srinivasan
ஜூன் 06, 2025 12:32

அவன் சொன்னது மாதா கோவிலாக இருக்கலாம்.


kamal 00
ஜூன் 06, 2025 11:49

இவன் 10 கிலோ அரிசி மதமாற்றம் கும்பல்...... போய் எலும்பு கடிக்க லாயக்கு


chinnamanibalan
ஜூன் 06, 2025 11:39

இந்து கோவில்களில் மட்டுமா திருவிழா நடக்கிறது? மசூதிகள், தேவாலயங்கள் அனைத்திலும் திருவிழாக்கள் நடைபெறுவது அமைச்சர் கண்களுக்கு புலப்படாமல் போனது ஏனோ?


ஆரூர் ரங்
ஜூன் 06, 2025 10:43

வேளாங்கண்ணி சர்ச்சில் கிருஸ்துமஸ் விசேஷ பிரார்த்தனை முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த ஆயிரம் பேர் சுனாமியால் அடித்து செல்லப்பட்டனர். அப்போது இவரும் வேளாங்கண்ணிக்கு சென்று பார்த்திருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை