உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு: அரசு உத்தரவுக்கு கவர்னர் எதிர்ப்பு

அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு: அரசு உத்தரவுக்கு கவர்னர் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி., உறுப்பினர் இல்லாமல் உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கவர்னர் ரவி கூறியுள்ளார்.இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை கவர்னர் அமைத்தார். இக்குழுவில் கவர்னர், தமிழக அரசு, பல்கலை சிண்டிகேட் மற்றும் யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி சேர்க்கப்படுகிறார். தேடுதல் குழுவின் கன்வீனராக கவர்னரின் பிரதிநிதியை நியமித்து, குழு அமைப்பதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என அக்., 25ல் தமிழக அரசுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.ஆனால், கடந்த 9 ம் தேதி தேடுதல் குழு அமைப்பதற்கான உத்தரவை தமிழக அரசின் உயர்கல்வித்துறை அரசிதழில் வெளியிட்டது. இதில், வேண்டுமென்றே யு.ஜி.சி., சேர்மனின் பிரதிநிதி விடுபட்டு உள்ளார். இது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது.2021 ல் யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவின் பரிந்துரைப்படி துணைவேந்தர் நியமிப்பது சட்ட விரோதம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.யு.ஜி.சி., விதிமுறைகளுக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கும் எதிராக உள்ளதால், தமிழக அரசின் அறிவிப்பு செல்லாது. இதனால், இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கவர்னர் ரவி கூறியுள்ளதாக கவர்னர் மாளிகை கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAMAKRISHNAN NATESAN
டிச 18, 2024 22:16

யு.ஜி.சி., விதிமுறைகளுக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கும் எதிராக உள்ளதால், தமிழக அரசின் அறிவிப்பு செல்லாது ........ திராவிட மாடல் இதையெல்லாம் மதிக்கணுமா ???? எதுக்கு ஆரிய யூஜிசி ???? எதுக்கு ஆரிய உச்சமன்றம் ????


Rpalni
டிச 18, 2024 20:42

த்ரவிஷ மாடல் ஆட்சி மிகக் கேவலமாக அதல பாதாளத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது என்று கண்கூடாக தெரிகிறது


Sundar R
டிச 18, 2024 20:15

"கஷ்டப்பட்டு, வேதனைப்பட்டு, திண்டாடி,...," என்ற சோ ராமசாமி அவர்களின் டிராமா டயலாக் தான் ஞாபகத்துக்கு வருகிறது.


Dharmavaan
டிச 18, 2024 19:47

இந்த நிலைக்கு காரணமே ஆளுநர்கள் கேவலப்படுத்தியேதான் இதை ஸ்டாலின் மேலும் கேவலப்படுத்துகிறார்.


pmsamy
டிச 18, 2024 19:13

நீ சொன்னாலும் யாரும் கேட்க போறது இல்ல


Rpalni
டிச 18, 2024 20:43

200 ரூவா வந்துடுச்சா


Bala
டிச 18, 2024 21:06

ஆனால் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது சட்டையை கிழித்துக்கொண்டு வரும்போது மட்டும் நீங்கள் நான் சொல்வதை கேட்கவேண்டும்


GMM
டிச 18, 2024 19:09

தமிழக மாநிலத்தை பொறுத்தவரை மாநில கவர்னர் ஒப்புதல் இல்லாமல் எந்த நிர்வாக பரிந்துரையும் செல்லாது. சட்ட மன்றம் உடல் என்றால், கவர்னர் ஒப்புதல் உயிர். துணை வேந்தர் தேடுதல் குழுவை அரசு நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை