உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீயாய் பரவுது அண்ணாமலை வீடியோ!

தீயாய் பரவுது அண்ணாமலை வீடியோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாடுகளுக்கு தீவனம் கொடுப்பது மற்றும் சாணத்தை சுத்தம் செய்யும் பணிகளை செய்யும் அண்ணாமலையின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை அருகே இயற்கை விவசாயம் செய்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது பூர்வீக நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார். அவரது தோட்டத்தில் ஏராளமான ஆடு, மாடுகள் உள்ளன. ஓய்வு கிடைக்கும் நாட்களில் அவற்றை பராமரிப்பது போன்ற வேலைகளை அண்ணாமலை செய்து வருகிறார்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ei5lo379&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விவசாய வேலைகளை செய்வது, மாட்டு சாணத்தை அள்ளிச் செல்வது மற்றும் தீவனம் கொடுப்பது போன்ற பணிகளில் அண்ணாமலை ஈடுபட்டுள்ள வீடியோ பேசும் பொருள் ஆகியுள்ளது. அரசியல் கட்சியினர் பலரும் அவரது வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Govi
அக் 25, 2025 04:26

இதுல என்ன அதிசயம். என்ன புதுமைனு ஒண்ணுமே புரியல புரிந்தவர் விளக்குக


கண்ணன்,மேலூர்
அக் 25, 2025 07:02

எவ்வளவு விளக்கினாலும் புரியாது..


மணிமுருகன்
அக் 24, 2025 23:26

அருமை


rama adhavan
அக் 24, 2025 20:49

செய்யும் தொழிலே தெய்வம்.


திகழ்ஓவியன்
அக் 24, 2025 20:27

அப்போ தனி கட்சி உறுதி , யாரும் கண்டு கொள்ளவில்லை மதிப்பதில்லை ஆகவே ஆடு மாடு மண் கிட்ட எல்லாம் பேச தொடங்கிவிட்டார் ஒன்மோர் சீமான்


Murugesan
அக் 24, 2025 21:20

பாட்டன், அப்பன் கொள்ளையடித்த சொத்தை வைத்து வாழுகின்ற வாரிசு அயோக்கியனுங்களை விட தன்னுடைய உழைப்பில் வாழுகின்ற வாழ்க்கையே சிறந்தது, ஆட்சி அதிகார மமதையில் விளம்பர தத்தி திராவிட அயோக்கியனுங்களை ஆதரிக்கின்ற குடிகார கூட்டம்


S Kalyanaraman
அக் 24, 2025 19:22

Nandru


Theni Saaral
அக் 24, 2025 19:14

தன் தோட்டத்தில் செய்யும் வேலையை வீடியோ போட வேண்டிய அவசியம்??


Narayanan Muthu
அக் 24, 2025 20:38

எல்லாம் ஒரு விளம்பரம்தான். சுய விளம்பரம் செய்வதில் மோடிக்கும் அண்ணாமலைக்கும் தான் போட்டியே.


Venugopal S
அக் 24, 2025 19:00

குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருப்பார் போல் உள்ளதே!


Shekar
அக் 24, 2025 20:20

அதுதானே, நம்ம சின்னவர்கூட ஒரு படத்திலே பன்னிக்குட்டிகளோட இருந்தாரே, யாராவது புகழ்ந்தானுகளா?


Vasan
அக் 24, 2025 18:59

அவர் கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தை யாராவது பார்த்தீர்களா?


Palanisamy Sekar
அக் 24, 2025 18:31

அண்ணாமலை இதனை வெளியிட்டு தன்னை பெருமையாக சொல்லிக் கொள்ளவில்லை. அரசியலில் சம்பாதித்துதான் வாழவேண்டிய அந்த கேவலமான எண்ணத்தை விட்டொழித்து உழைக்கும் தனது பாணியை உலகிற்கு உணர்த்தியுள்ளார். பிடிக்காத ஜென்மங்களுக்கு உழைக்கும் எண்ணமிருக்காது. உழைக்கும் அண்ணமாலைதான் இன்றைய ,நாளைய இளைஞர்களின் நல்ல உதாரண மனிதன். சபாஷ் அண்ணாமலை. நீங்கள் எல்லோருக்கும் பிடித்த நல்ல பண்புள்ள தலைவர் என்பதுதான் சிலருக்கு வயிற்றில் எரிச்சல்.


முதல் தமிழன்
அக் 24, 2025 18:14

எதுக்கு இந்த வெட்டி விளம்பரம்? இவரு ரேஸிங் பண்ணி இப்போ என்ன பயன். ஏதோ எதிர்பார்த்து ஏமாந்து...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை