உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டுமே ஆண்டுதோறும் கெடுபிடி: ஹிந்து முன்னணி

ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டுமே ஆண்டுதோறும் கெடுபிடி: ஹிந்து முன்னணி

திருப்பூர் : 'ஒவ்வொரு ஆண்டும் ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு கெடுபிடி காட்டப்படுகிறது' என ஹிந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி என ஹிந்து பண்டிகைகள், திருவிழாக்கள் வரும்போது தான், தமிழகத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருப்பதே தெரிகிறது. ஹிந்துக்களின் பண்டிகைகளை சீர்குலைப்பதற்காக, திட்டமிட்டு அறிவிப்புகள் செய்யப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை இயற்கையோடு இணைந்த விழாவாக கொண்டாட, ஹிந்து முன்னணி கவனம் செலுத்தி வருகிறது. காகித கூழ், இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தரும் வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில், துாய்மைக்கு முன்னுதாரணமாக எப்படி செயல்பட்டோம் என்பதை உலகமே வியந்து பார்த்தது. தற்போது பல கெடுபிடிகளை காட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், 'தமிழகத்தில் அனைத்து ஆறு, குளம், ஏரி, குட்டைகள் எந்த அளவு மாசுபட்டுள்ளன என்பதை ஆராய்ந்து தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது? பல ஆண்டுகளாக, கேரளாவில் இருந்து தமிழக எல்லையில் ஆபத்தான ரசாயன கழிவுகள் பல நுாறு லாரிகளில் கொட்டப்படுவதில் என்ன நடவடிக்கை எடுத்தது? இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவில், 'நமது சுவாமி, நமது கோவில், அதை நாமே பாதுகாப்போம்' என்ற பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளோம். கோவில், கோவில் நந்தவனம், திருக்குளம் ஆகியவற்றின் பாதுகாப்பு, பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஹிந்து முன்னணி ஏற்படுத்த இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Gajageswari
ஆக 11, 2025 08:47

திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் நக்சலைட்


முதல் தமிழன்
ஆக 10, 2025 17:14

அட போங்கய்யா அவனவன் காசு இல்லாம இருக்கான்.


K Ganesan Ganesan
ஆக 10, 2025 14:00

Why doesnt the e tem and its cascading effects of e untouchability, e naxals ,dalit genocides ,e honour killings e jihad, e felony, e terrorism ete hurt the sentiments of Hinduism and Hindu society?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை