உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த அநாகரிகம்; அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன்

அடுத்த அநாகரிகம்; அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மகன் சூரியராஜபாலு, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அணிவித்த பதக்கத்தை கழுத்தில் வாங்காமல் அவமதித்து, கையில் பெற்று சென்றார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டியில், தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து, மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை நடத்தி வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jzcpi1q8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 22ல் துவங்கிய போட்டிகள், 28 வரை நடக்கின்றன. நேற்று நடந்த போட்டியின் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அழைக்கப்பட்டிருந்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகன் சூரியராஜபாலுவும், அண்ணாமலை கையால் பதக்கம் வாங்க மேடைக்கு வந்தார். அப்போது அண்ணாமலை பதக்கத்தை, சூரியராஜபாலு கழுத்தில் அணிவிக்க முயன்றார். அப்போது, அண்ணாமலை கையை தடுத்தார் சூரியராஜபாலு.'கையில் வேண்டுமானால் கொடுங்கள் வாங்கிக் கொள்கிறேன். என் கழுத்தில் பதக்கத்தை நீங்கள் அணிவிக்க வேண்டாம்' என்று சொன்ன சூரியராஜபாலு, பதக்கத்தை கையில் வாங்கிக் கொண்டார்.இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அண்ணாமலை அப்செட் ஆனார். ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் சுதாரித்தார். சூரியராஜபாலுவை நிர்ப்பந்தப்படுத்தாமல், பதக்கத்தை கையில் கொடுத்து விட்டு, பக்கத்தில் நிற்க வைத்து போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.சமீபத்தில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி கையால் பட்டம் வாங்க, நாகர்கோவில் தி.மு.க., நிர்வாகியின் மனைவி மறுத்த சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில், அடுத்த சம்பவமாக ஆவாரங்குடிபட்டி சம்பவம் அரங்கேறி உள்ளது.

தம்பி நல்லா இருக்கணும்!

இது குறித்து நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: அண்ணா அது ஒன்னும் இல்லைங்க அண்ணா. அந்த தம்பி நல்லா இருக்கணும். எங்கு இருந்தாலும் கூட சிறப்பாக இருக்க வேண்டும். நான் பார்த்தேன். அது அவருடைய இஷ்டம். அவர் யார் கையில் பதக்கம் வாங்க வேண்டும். யார் கையில் வாங்க கூடாது என்பது ஒவ்வொரு மனிதருடைய இயல்பு. என்னை பொறுத்தவரை டிஆர்பி ராஜாவின் மகன் எங்கு இருந்தாலும் கூட சிறப்பாக இருக்கணும். இந்த துறையில் சாதனை பண்ணணும். ஒரு பெரிய மனிதராக வளர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அது என் கையில் பதக்கம் வாங்க வேண்டும், வாங்கவில்லை, வாங்குவதற்கு மறுத்துவிட்டார், இன்னொருவர் கையில் வாங்கினார் என்பது முக்கியமில்லை அண்ணா. நல்ல மனிதராக வர வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 140 )

baala
செப் 20, 2025 09:51

பையன் செய்தது சரிதானே. அதை வாங்க அவசியமில்லை


Parthasarathy Badrinarayanan
செப் 17, 2025 15:52

ஏங்க அவனுக்கு கொடுக்க வேண்டியதை தந்தால்........


Palanisamy T
செப் 07, 2025 18:31

அதற்கு இவன் நிகழ்ச்சிக்கு வராமலே இருந்திருக்கலாம். இவன் பாஜகவை மட்டும் அசிங்கப் படுத்த வில்லை, தனிப் பட்ட முறையில் அண்ணாமலை அவர்களையும் கேவலப் படுத்தியுள்ளான். வளர்ப்பு முறை சரியில்லையா அல்லது இவன் குடும்பத்தின் நாகரீகம் இப்படித் தானா?வேறு யாரையும் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தி இருக்கலாம், அண்ணாமலை அவர்களை அவமானப்படுத்தியதை மன்னிக்கமுடியாது.


Parthasarathy Badrinarayanan
செப் 17, 2025 15:53

நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால் வாங்கியிருப்பான்


spr
ஆக 31, 2025 19:13

கழுத்தில் போடவில்லை என்பது பெரிய குறையா? "அவர் கையால் தர இவர் கையால்தானே வாங்கிக் கொண்டார். வாங்கும் கை எப்பொழுதும் தாழ்ந்து தானே இருக்கும்"அது அவமதிப்பாகத் தோன்றவில்லையா என இப்படியும் யோசிக்கலாமே. அவர் வாங்க மறுத்தால்தான் அநாகரிகம் .


Jayaraman Ramaswamy
ஆக 29, 2025 15:12

மிகசிறந்த பெற்றோர்களின் வளர்ப்பு. மனிதர்களை மதிக்க தெரியாது.


sundararajan
ஆக 28, 2025 08:32

May be, he doesnt deserve to receive from him...


koderumanogaran
ஆக 27, 2025 10:55

அறியாமையின் வெளிப்பாடு... வளர்ப்பு அப்படி.. தாத்தா.. அப்பா... நேர்மையாக வளரவில்லை என்பது புரிந்ததால் நேர்மையான மனிதர் கையால் பதக்கம் வாங்க கூச்சம் இருந்திருக்கலாம்...


Mahendran Puru
ஆக 26, 2025 22:37

அடுத்தடுத்து சங்கி தலைகள், முதலில் ரவி இப்போ மலை வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது முறையே து ஜ மற்றும் கவர்னர் பதவி. எப்போது கிடைக்குமோ?


Matt P
ஆக 26, 2025 18:21

கழுத்தில் பதக்கம் போடாதது அவமதிப்பு என்று நினைக்க முடியவில்லை. அண்ணாமலையுடன் படம் எடுத்திருக்கிறார். கையில் தரலாம் என்று பெற்று இருக்கிறார். முன்பு எல்லாம் பெண்கள் கழுத்தில் மாலை அடுத்தவர்கள் அணிவிப்பதில்லை. கணவன் மட்டும் தான் அணிவிக்க வேண்டும் என நாம் கருதுவதால்.


theruvasagan
ஆக 26, 2025 17:08

இதே மாதிரி அவனுக கையால பதக்கம் பரிசு வாங்கும்போது செய்தால் அவனுகளோட ரியாக்ஷ்ன் இப்படித்தான் இருக்குமா என்று பார்க்க ஆவலாக உள்ளது. அதேபோல அல்லக்கைகளும் இப்ப இதுக்கு முட்டு குடுக்கற மாதிரி அதுக்கும் குடுப்பாங்களா என்றும் பார்க்கணும்.


அன்பு
ஆக 27, 2025 02:21

பதக்கம் வாங்க வராமலேயே இருந்திருக்கலாம். அநாகரீகமாக அவமதிப்பது, அசிங்கப் படுத்துவது, குடும்ப நலனுக்காக, அமைச்சர் பதவி வேண்டுமாயின் காலில் விழுவது திமுகவுக்கு கைவந்த கலை.


புதிய வீடியோ