உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு; ரைட்டர் கைது

கோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு; ரைட்டர் கைது

கோவை: போலீஸ் ரைட்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.கோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் ஆக இருப்பவர் ரமேஷ். இவர் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வரும் புகார் தாரர்களிடமும், பாஸ்போர்ட் விபரங்களை சரிபார்க்கவும் லஞ்சம் பெற்று வருவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பாஸ்போர்ட் விபர சரிபார்ப்புக்கு ரூ1,000 லஞ்சம் வாங்கிய ரைட்டர் ரமேஷ், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இதையடுத்து, செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரைட்டர் ரமேஷ் லஞ்ச பணத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஒளித்து வைத்துள்ளாரா? என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். மேலும், அவரை கைது செய்தும் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போலீஸ் ஸ்டேஷனிலேயே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது கோவையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kasimani Baskaran
ஏப் 10, 2025 04:13

மீதமுள்ள எழுத்தர்கள் மிக மிக புனிதமானவர்கள். இந்துகளுக்கு உடலுடன் காமிரா ஒன்றை பொருத்தினால் 100% சிக்குவார்கள்.


nagendhiran
ஏப் 09, 2025 20:14

லஞ்ச ஒழிப்பு"துறை வந்தா சட்டம் தன் கடமையை செய்கிறது? அதுவே? சிபிஐ வந்தா மட்டும் பழிவாங்கும் நடவடிக்கையா என்ன? உங்களுக்கு வந்தா ரத்தம் மற்றவர்களுக்கு வந்தா தக்காளி தொக்கா? இல்ல திராவிட தொக்கா?


K.Ramakrishnan
ஏப் 09, 2025 19:33

இந்த ஒரு போலீஸ் நிலையத்தில் ரெய்டு நடத்தி பிரயோஜனம் இல்லை. தமிழ்நாடு முழுவதும் இப்படித்தான் இருக்கிறது. லஞ்சம் வாங்காத ஒரு போலீஸ்காரரை சொல்லுங்கள். நகை களவு புகார் கொடுத்தாலே, திருட்டு போனதில் பாதியைத்தான் புகாரில் எழுதுகின்றனர். அதன்பிறகு அடிக்கடி பணம்கொடுத்தே அழவேண்டிய நிலை.இதனால் தான் பலரும் வீட்டில் திருடு போனாலும் போலீசில்புகார்அளிப்பதே இல்லை. கலைஞர் சொன்னது போல, காவல்துறையின் ஈரல் கெட்டு ரொம்ப நாள் ஆகி விட்டது.


Ramesh Sargam
ஏப் 09, 2025 19:00

அப்பா, தமிழகத்தில் லஞ்சம் ஒழிந்தது, அப்படித்தானே முதல்வரே...?


Karthik
ஏப் 09, 2025 21:46

பாஸ்போர்ட் விபர சரிபார்ப்புக்கு வாங்கிய 1000 ரூபாய் லஞ்ச பணத்தை ரைட்டர் போலீஸ் ஸ்டேஷனில் ஒளித்து வைத்துள்ளாரா? என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சல்லடை போட்டு தேடிக்கிட்டு இருக்காங்களாம்.. 1000 ரூபாய் இன்னும் கிடைக்கவில்லையாம்..


சுந்தர்
ஏப் 09, 2025 18:59

என்னடா இது ? போக வேண்டிய இடத்துக்கு, போக வேண்டிய தொகை சரியா போய் சேரலியா என்ன ? சரி.. சரி.. எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துப்பான்.


Kumar
ஏப் 09, 2025 18:41

பொனம் தின்னும் பல நாய்கள் இருந்து கொண்டு நம் சுதந்திரத்தை கேள்விக்குரியாக்குகிறது. மனிதனின் அடிப்படை உரிமையில் கை வைக்கும் அரசு செத்த பிணத்திற்கு சமம். சொந்த பிரச்சனை பண பிரச்சனை குடும்ப பிரச்சனையால் காவல் துறையிடம் வருபவர்களை (அதிகார பலத்தால்) மரியாதை குறைவாக பேசும் நாய்கள் பணபேய்கள். எரிகின்ற வீட்டில் திருட நினைப்பவனுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்.


V Venkatachalam
ஏப் 09, 2025 18:33

அப்பாவி ரைட்டர் கைது.. அவனுக்கு பின்னாடி இருப்பவன்களின் கைது எப்போது?


மீனவ நண்பன்
ஏப் 09, 2025 18:25

சினிமாவில் வரும் காமெடி மாதிரி அவ்வப்போது கிச்சுக்குச்சு மூட்டுவாங்க


சுந்நர்
ஏப் 09, 2025 18:55

போக வேண்டிய இடத்துக்கு, போக வேண்டிய தொகை சரியா போகலையோ ? எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துப்பான்.


Venkateswaran Rajaram
ஏப் 09, 2025 18:00

மிகப்பெரிய அதிசயம்.. நம் நாட்டில் இல்லாத அதிசயம்... ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத இடம்தான் அதிசயம் என்று சொல்ல வேண்டும்...


Oru Indiyan
ஏப் 09, 2025 17:48

காவல்துறை நீதிமன்றம் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள்.. எல்லோரும் லஞ்சம் வாங்கும் குற்றவாளிகள். தப்பித்து கொள்பவர் யார்... அந்த லஞ்சத்தை கொடுக்கும் புண்ணியவான்கள். லஞ்சம் கொடுப்பவனையும் கைது செய்தால். எல்லோரும் சிறையில் தான் தம்பி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை