உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

கடலூர்: கடலூரில் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த 2016-2021ம் ஆண்டு வரை பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சத்யா பன்னீர்செல்வம். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.அதுமட்டுமில்லாமல், இவரது கணவர் பன்னீர்செல்வம் நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடலூர் பண்ருட்டியில் உள்ள சத்யாவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.இந்நிலையில், மீண்டும் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rengaraj
ஜூலை 18, 2025 14:01

ரெய்டு நடத்தி என்ன ப்ரோயோஜனம் ? கமிஷன், கலெக்க்ஷன், கரப்ஷன் என்று பொய்ச்சொல்லி திமுக ஆட்சிக்கு வந்து நாலு ஆண்டுகளாகிவிட்டது. இதுவரை எத்தனை ரெய்டுகள் நடந்துள்ளன ? லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா ?? இந்த நாலு ஆண்டுகளில் திமுக அரசு இதுவரை யார் மீதாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு பதிந்திருக்கிறதா ? இந்த மாதிரி நடப்பதெல்லாம் கபட நாடகம். மக்களை ஏமாற்றுவதற்காக இரு கழகங்களும் திரை மறைவில் போட்டுக்கொண்ட கள்ளக்கூட்டணி ஒப்பந்தத்தின் மற்றுமொரு அங்கம். அதிமுக கடைநிலை நிர்வாகிகள், மற்றும் எம்ஜிஆர் , ஜெவின் உண்மையான தொண்டர்கள் இந்த கபட நாடகத்தை , கள்ளக்கூட்டணியை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகள் கபடநாடகவேஷதாரிகளின் முகமூடியை கிழித்தெறியவேண்டும். அதுவே எம்ஜிஆருக்கும் ஜெ வுக்கும் அவர்கள் செலுத்தும் உண்மையான அஞ்சலி.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 18, 2025 11:27

சுருட்டுனது எல்லாத்தையும் அப்படியே பதுக்கிட்டா இதுதான் பிரச்னை ...... கட்டிங் சரியாக் கொடுத்து வைக்கணும் ........


Perumal Pillai
ஜூலை 18, 2025 11:16

ஒரே குட்டையில் ஊறிய சாக்கடை மட்டைகள்.


Narayanan
ஜூலை 18, 2025 10:44

லஞ்ச ஒழிப்புத்துறை உண்மையிலேயே மனசாட்சியுடன் ஸ்டாலின் தொடக்கம் அனைத்து திமுகவினரின் வீடுகளில் சோதனை செய்யுமா ? அப்படி செய்தால் தமிழகத்தின் 9 லாஷ்க்ஷம் கோடி கடனை உடனடியாக தீர்க்கலாம் .


M S RAGHUNATHAN
ஜூலை 18, 2025 10:37

இந்த raid அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாத தூய வேட்டை. DVAC அமலாக்கத் துறை போல் பழி வாங்கும் நடவடிக்கை எடுக்காது. இது திராவிடிய மாடல் அரசு.


R.P.Anand
ஜூலை 18, 2025 09:43

திராவிடம் ஒரே நாளில் லஞ்சத்தை ஒழித்து விடும்.....


ஆரூர் ரங்
ஜூலை 18, 2025 09:06

செந்தில் பாலாஜி, வேலு,முத்துசாமி, KKSSR, சேகர் பாபு வழியில் திமுக வுக்கு மாறி விடுங்கள். பாதுகாப்புடன் முன்னேறலாம். பங்காளிதானே?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை