உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை:கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வழங்கும், கல்வி உதவித் தொகை பெற, வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஒவ்வொரு ஆண்டும், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 17 லட்சம் ரூபாய், கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது. இதை பெற, படிப்பில் சிறந்த, திறமையுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, பிளஸ் 1, பிளஸ் 2, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை, 'www.kalkionline.com' என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி