உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏர்போர்ட்டில் வேலை மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

ஏர்போர்ட்டில் வேலை மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்திய விமான நிலைய ஆணையம், விமான தகவல் கட்டுப்பாட்டுப் பிரிவில், இளநிலை அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப உள்ளது.விமான நிலையங்களில், ஏ.டி.சி., எனப்படும், விமான போக்குவரத்து தகவல் கட்டுப்பாட்டு கோபுரம் செயல்படுகிறது. இங்கிருந்து தான் விமான இயக்கங்கள் செயல்படும். இந்நிலையில், விமான நிலைய ஆணையம், ஏ.டி.சி., இளநிலை அதிகாரிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுதும், 309 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கு பி.எஸ்சி., வேதியியல், கணிதம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். வயது 27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க, 25ம் தேதி கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.aai.aero இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

PERUMALSAMY. K SAMY
ஏப் 24, 2025 21:53

குட்


PERUMALSAMY. K SAMY
ஏப் 24, 2025 21:51

கிரேட்


மீனவ நண்பன்
ஏப் 22, 2025 05:44

விமானிகள் நிறைய தேவைப்படுகிறார்கள் ...விமான இஞ்சினீர்கள் பணிப்பெண்கள் மற்றும் கிரௌண்ட் சர்வீஸ் பிரிவில் நிறைய இடங்கள் நிரப்ப வேண்டும் ...அதற்கான பயிற்சி நிலையங்கள் குறைவு .. கல்வி தந்தைகள் கரிசனம் காட்ட வேண்டும்