உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க.வின் 2வது கட்ட மா.செ.,க்கள் நியமனம்; பொறுப்பை வழங்கியவுடன் விஜய் கொடுத்த வார்னிங்

த.வெ.க.வின் 2வது கட்ட மா.செ.,க்கள் நியமனம்; பொறுப்பை வழங்கியவுடன் விஜய் கொடுத்த வார்னிங்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் பணிகளில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். பிப்.,2ம் தேதி கட்சி தொடங்கி முதலாமாண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்பாக மாவட்டம் மற்றும் மாநில அளவில் நிரப்பப்படாத பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிப்பதில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ecrs04ki&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, த.வெ.க., மாவட்ட செயலர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கடந்த 24ம் தேதி சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது, நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, 19 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், 2வது கட்ட மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பனையூரில் இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். சென்னை புறநகர் - சரவணன்தென்சென்னை - தாமுசென்னை கிழக்கு - பாலமுருகன்புதுக்கோட்டை - பர்வேஸ்கன்னியாகுமரி மத்திய மாவட்டம் - கிருஷ்ணகுமார்கன்னியாகுமரி கிழக்கு - மாதவன்மதுரை மேற்கு - தங்கபாண்டிநாகை - சுகுமார்தர்மபுரி மேற்கு - சிவாகள்ளக்குறிச்சி மேற்கு - பிரகாஷ்நாமக்கல் கிழக்கு - செந்தில்நாதன்மயிலாடுதுறை - கோபிநாத்எச்சரிக்கைதொடர்ந்து, புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, 'மாவட்ட அளவிலான நிர்வாகிகளை நியமிக்கும் போது கட்சியின் கட்டமைப்புக்கு வலுசேர்க்கும் சிறந்த தொண்டர்களுக்கு, நிர்வாக பொறுப்புகளை வழங்க வேண்டும். நிர்வாக பொறுப்புகளை வழங்குவதில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை