அரசு வழக்கறிஞர்கள் நியமனம்
சென்னை:சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில், அரசு சார்பில் வாதாட, 39 புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எட்டு வழக்கறிஞர்கள் சிறப்பு பிளீடர்களாகவும், ஏழு பேர் கூடுதல் அரசு பிளீடராகவும், குற்றவியல் வழக்குகளுக்கு ஏழு பேரும், உரிமையியல் வழக்குகளுக்கு 16 பேரும் ஆஜராவர்.