உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளையராஜாவுக்கு பாராட்டு விழா; முதல்வர், நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்பு

இளையராஜாவுக்கு பாராட்டு விழா; முதல்வர், நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்பு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு இசைப்பயணத்தை கவுரவிக்கும் விதமாக, அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்றனர்.தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா சினிமாவிலும் முக்கியமான இசை ஆளுமை இளையராஜா. ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் இப்போதும் 82 வயதில் படங்களுக்கு இசையமைத்தும், சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து சாதித்து வருகிறார். இவர் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்காக திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.இதையடுத்து லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50 ஆண்டு சாதனையை புகழும் விதமாகவும், அவர் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழா தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் என்று சட்டசபையிலேயே முதல்வர் அறிவித்தார். பின்னர் சில காரணங்களால் அந்த விழா தள்ளிப்போனது.இந்த விழா, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, தேவயாணி, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை 'அமுதே… தமிழே...' என்ற பாடலை பாடி இளையராஜா தொடங்கி வைத்தார். அதன்பிறகு, இளையராஜா இசை அமைத்த, 'மடை திறந்து பாயும் நதியலை நான்' என்ற பாடலை எஸ்பிபி சரண் பாடினார். எஸ்பிபி பாடிய, 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலை சரண் பாடியபோது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். செந்தூரப் பூவே பாடலை பாடிய பாலிவுட் பாடகி விபாவரி ஆப்தே ஜோஷிக்கு தமிழ் தெரியாத நிலையிலும், சிறப்பாக பாடியதாக பாராட்டிய கமல், 'இந்த நிகழ்ச்சியில் பட்டியலிடப்பட்டுள்ள பாடல்கள் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்து கொடுத்தது,' எனக் கூறினார். இளையராஜாவின் கலையுலக சாதனைகளை சிறப்பிக்கும் வகையில், மத்திய அரசு அவருக்கு ராஜ்யசபா நியமன எம்.பி., பதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Padmasridharan
செப் 15, 2025 07:48

பாடகி ஜானகி அவர்களை வரவழைத்து இருந்தால் இந்த விழாவுக்கு சிறப்பு சேர்த்து இருக்கலாம். இவரின் இசையால் நடித்து வெற்றி பெற்ற மற்ற நடிகைகளை காணோம். ஏன் சாமி


vbs manian
செப் 13, 2025 22:35

இவருக்கு முன் இசை உலகில் சாதித்தவர்களை ஏன் மறந்து போன து தமிழகம். சினிமா இசையில் மஹாதேவன் விஸ்வநாதன் ராமமூர்த்தி .கர்நாடக இசையில் எதனை ஜாம்பவான்கள்.


Muniya Samy
செப் 13, 2025 22:28

இசை அரசர்


Venkatesh
செப் 13, 2025 22:22

இளையராஜாவுக்கு மாநிலங்களவை பதவி கொடுத்து பாரதீய ஜனதா கட்சி சிறப்பித்தது. மகிழ்ந்தோம். நேற்று மூகாம்பிகை தாய்க்கு அவர் 8 கோடி ரூபாய் மதிப்பு உள்ள காணிக்கை வழங்கினார். நெகிழ்தோம். இன்று திமுக//கமலுடன். வருந்துகிறோம்.


Venkatesh
செப் 13, 2025 22:13

அருமை


Vasan
செப் 13, 2025 22:04

CM Stalin Sir already TOLDED. "There can not be anybody who have not sang Rajas song" Raje, Rajadhi Rajan Indha Raja, 2G Raja, 1.76 lakh Crore Raja.


எதிர்தமில்
செப் 13, 2025 21:43

குக்கிராமத்தில நடக்கிற திரு விழாவிலே கூட நல்ல ரசனையோடு விழா நாயகனான இளையரஜாவிற்கு விழா எடுத்திருப்பார்..இன்று அரசே நடத்திய விழா எல்லா விதத்திலும் மகா மட்டம்


V Venkatachalam
செப் 13, 2025 20:55

இது அப்பட்டமான கட்சி விழா.இதுல நாத்திகன் கமலின் பேச்சை கவனிக்க வேண்டும். முதல்வர் தேர்ந்தெடுத்த பாடல்களாம். டெல்லியில் ஏதோ பெரிசா நடக்கப்போவுது.. அதுக்கு அஸ்திவாரம் இது. திருட்டு தீய முக காரனுங்க ஆதாயம் இல்லாமல் துரும்பை கூட கிள்ளி போட மாட்டானுங்க. அப்படி பட்டவனுங்க இப்ப நரி வேஷம் போடுறானுங்க. இளையராஜா இவனுங்க கிட்ட சிக்கிக்காம ஜாக்கிரதையாக இருக்கணும்.


Oviya Vijay
செப் 13, 2025 19:54

மிகச் சிலரைத் தவிர பெரும்பாலானோர் இதுவரை அறிந்திடாத ஒன்றை இந்நேரத்தில் உங்களுடன் பகிர விரும்புகிறேன்... இளையராஜாவின் உண்மையான பிறந்தநாள் ஜூன் 3 ம் தேதி... ஆனால் அதே நாளில் கலைஞருக்கும் பிறந்தநாள்... தனக்கு இசைஞானி பட்டம் வழங்கிய கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்த எண்ணி தன் பிறந்தநாளை ஒரு நாள் முன்னதாக அதாவது ஜூன் 2 ம் தேதியாக இந்த இசையின் ராஜா மாற்றிக் கொண்டார்... அது இன்றளவும் தொடர்கிறது...


Natarajan Ramanathan
செப் 13, 2025 20:27

கற்பனையாகவே இருந்தாலும் உண்மை அதுவல்ல. ஒரு தீயசக்தி பிறந்த அன்றே தானும் பிறந்ததாக சொல்ல அவமானப்பட்டு ஒருவேளை தனது பிறந்தநாளை ஒருநாள் முன்னதாக சொல்லி இருக்கலாம்.


vivek
செப் 13, 2025 20:31

உம்மை போல உமது கருத்தும் எதற்கும் உதவாது...எதற்கும் இதயம் பத்திரம்


Oviya Vijay
செப் 13, 2025 20:40

ஓஹோ... ஒருவேளை உங்க ஜீயும் தீயசக்தி பிறந்தநாளில் தங்கள் பிறந்தநாள் வேண்டாம் என்று முடிவெடுத்து ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொள்வார்களா என்ன... நடந்தாலும் நடக்கலாம்...


VenuKopal, S
செப் 13, 2025 20:47

ஆர்டிஸ்ட் விட்டால் சூரியன் மேற்கே மறையும் என்பதை அறிந்த மிகச் சிலருக்கு தெரிந்ததை செல்கிறேன் அப்டின்னு இன்னும் டாஸ்மாக் தெளியாமல் இரு நூறுக்கு மாரடிக்கும் கூட்டம்


Ms Mahadevan Mahadevan
செப் 13, 2025 18:59

மக்கள் பணம் எப்படியெல்லாம் வீணாகிறது? கட்சி பணத்தில் செய்ய வேண்டியது தானே? போக்குவரத்து துறையில் உள்ள குறைகளை தீர்க்க வக்கில்லாத அரசு இப்படி செய்யலாமா?


சமீபத்திய செய்தி