உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிர்மலா சீதாராமனுக்கு இன்று பாராட்டு விழா

நிர்மலா சீதாராமனுக்கு இன்று பாராட்டு விழா

கோவை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, கோவை யில் இன்று பாராட்டு விழா நடக்கிறது. ஜி.எஸ்.டி., 2.0 வரி சீர்திருத்தம் செய்தமைக்காக, நீலம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி. கன்வென்ஷன் அரங்கில் இன்று மாலை 4:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, வணிகர் சங்க பேரவையினர் பாராட்டி கவுரவிக்கின்றனர். பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, கேரள வியாபாரி விவசாயி ஏகோபன சமிதி, கர்நாடக உணவு தானிய வர்த்தக சம்மேளனம், சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம், புதுச்சேரி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

மனிதன்
நவ 11, 2025 15:18

எதற்கு?


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 11, 2025 09:20

அவர் அப்படி என்ன சாதித்துவிட்டார் என்று திமுகவினர் கேட்பார்கள்.


ASKR TRUST
நவ 11, 2025 10:48

விக்ரம ராஜாவிடம் கேட்க சொல்லுங்கள்


Ramesh Sargam
நவ 11, 2025 09:03

அவர் அப்படி என்ன சாதித்துவிட்டார் என்று திமுகவினர் கேட்பார்கள். திமுகவினரின் சாதனை வேறுவிதமாக இருக்கும். அண்ணா பல்கலை வளாக சம்பவம், கரூர் சம்பவம், நேற்று திருச்சி சம்பவம், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் திமுகவின் சாதனைகளை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை