உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவலாளி கொலையில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு?

காவலாளி கொலையில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருபுவனம்: கோவில் காவலாளி அஜித்குமார், 27, தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதன் பின்னணியில், உயர் அதிகாரிகள் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.நகை, பணம் திருடியதாக அஜித்குமார் மீது புகார் அளித்த, மதுரையை சேர்ந்த நிகிதாவின் தந்தை துணை கலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரின் தாய், அரசு பணியில் இருந்துள்ளார். முனைவர் பட்டம் பெற்ற நிகிதாவும், அரசு கல்லுாரியில் பணிபுரிந்துள்ளார்.திருமண மோசடி, அரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கிலும் நிகிதா சிக்கி உள்ளார். நிகிதாவின் குடும்பத்தார் அரசு பணிகளில் இருந்ததால், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர்.அவர்களுடன் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது, அஜித்குமார் கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு மாற்றி உள்ளது.சி.பி.ஐ., அதிகாரிகள், திருப்புவனம் காவல் நிலைய போலீசார் பதிவு செய்துள்ள ஆவணங்களை பெற்றுள்ளனர். அஜித்குமார் கொலைக்கு மூல காரணமாக இருந்த உயர் அதிகாரிகளிடம் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Matt P
ஜூலை 05, 2025 12:59

காரில் வைச்சிருந்த நகையை காணோம்னு கம்பளைண்ட் கொடுத்தார்களாம். காரை பூட்டாமல் வைச்சிருந்தாங்களா? பூட்டியிருந்தால் கார் கதவு உடைச்சு திருடப்பட்டதா? கோயிலுக்கு வந்தவங்க நகையை காரில் வைச்சிட்டு ஏன் சாமிய கும்பிடனும்? நகையை வீட்டில வைக்காமல் லாக்கரில் வை யுங்கிறாங்க. lockerilyum வைக்கலை வீட்டிலேயும் வைக்கல. வீடியோ ஆதாரமோ வேறு சாட்சியோ இருந்தால் வேறு விஷயம். ஒண்ணுமே இல்லாமல் ஒருத்தி சொன்னாள் என்பதற்காக ஒரு உயிர் காவு கொடுக்கப்பட்டதற்கு தமிழ்நாடே தலை குனியனும்.


V.Mohan
ஜூலை 04, 2025 11:59

திராவிட பதர்கள் இடம் பெற்றுள்ள இரண்டு தமிழ்நாட்டு கட்சிகள் தமிழ்நாட்டை நாசம் செய்துள்ளன. இவர்களது ஆசி பெற்ற அரசு அதிகாரிகள், கட்சிக்காரர்கள்,லஞ்சம்,பொய் புரட்டு, ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அனைத்து அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் ஊழல் மேல் ஊழல் செய்து மக்களை கெடுத


Nagarajan D
ஜூலை 04, 2025 10:26

விசாரித்து என்ன செய்யப்போறானுங்க


Matt P
ஜூலை 06, 2025 00:08

அஞ்சோ பத்தோ அதிகமா ஏழைக்கு ஏற்றவாறு போட்டு கொடுப்பாங்க.


ديفيد رافائيل
ஜூலை 04, 2025 08:25

பொறுத்திருந்து பார்க்கலாம் நீதி ஜெயிக்குமா? அநீதி ஜெயிக்குமா?


Perumal Pillai
ஜூலை 04, 2025 08:08

சட்டம் நெருங்காது .


Padmasridharan
ஜூலை 04, 2025 06:31

பெண் என்றால் பேயும் இறங்குமென்பார்கள். தற்பொழுது அவர்கள்தானே பல ஆண்களுக்கும் எதிராக பொய்ப்புகார்கள் அளிக்கின்றனர். பணத்தை ஒருவரிடமிருந்து வாங்கி மற்றவர்களுக்கு கொடுத்து கூட்டணியாக செயல்படுகின்றனர் சாமி. ஆண்களுக்கோ பெண் மோகம் பண மோகம் ஆண் காவலர்களே ஆண்களை குற்றவாளிகளாக மாற்றி பெண்களுக்கு துணைபோகின்றனர்.


Samy Chinnathambi
ஜூலை 04, 2025 06:23

2011 இல் துணை முதல்வராக இருந்தவருடைய உதவியாளரின் உதவியுடன் பெரும் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் கூட அந்த செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்படாமல் மீண்டும் மீண்டும் மோசடியில் ஈடுபட்டதாக தோண்டி துருவி செய்திகள் வருகின்றன.


சமீபத்திய செய்தி