உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரிட்டாபட்டியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்

அரிட்டாபட்டியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் மேலுார் அரிட்டாபட்டி பகுதியை சுற்றியுள்ள 48 கிராமங்களையும் தொல்லியல் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்கும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது. மதுரையில் மத்திய அரசு பங்களிப்புடன் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கான டெண்டர் விடுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அரசு உறுதியளித்ததோடு சட்டசபையில் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றியது. ஆனால் மத்திய அரசின் டெண்டர் நடைமுறை இன்னும் ரத்து செய்யப்படவில்லை. எனவே இப்பகுதியை பல்லுயிர் பெருக்க மேம்பாடு, தொல்லியல் மற்றும்வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மதுரையில் அரிட்டாபட்டி பகுதியை சுற்றி 48 கிராமங்களை உள்ளடக்கி டங்ஸ்டன் கனிமவளம் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசே டெண்டரை இறுதி செய்துஉள்ளது. டெண்டர் இறுதி செய்யும் வரையிலும் தமிழக அரசு மறுப்பை தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஒப்பந்தம் கோரி தகுதியான நிறுவனங்களை தேர்வுசெய்யும் அதிகாரம்மட்டுமே மத்திய அரசிடம்உள்ளதாகவும் அந்நிறுவனங்களோடு குத்தகை உரிமை மேற்கொள்வதும்அதிலிருந்து வரும் வருவாய் முழுமையும் மாநிலஅரசுக்கே சொந்தம் என்றும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் மத்திய அரசை காட்டி மாநில அரசும் மாநில அரசை காண்பித்து மத்திய அரசும்தப்பித்துக்கொள்ள நினைக்கும் கூட்டுச்சதி அம்பலமாகியுள்ளது. மத்திய மாநில அரசுகளின் சதிச்செயலை கண்டிக்கிறோம். அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களையும் உள்ளடக்கி பல்லுயிர் பெருக்கமாகவும் தொல்லியல், வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தொல்லியல் துறை, வேளாண் துறை, சுற்றுச்சூழல் துறை மூலம் இதற்கான அரசாணை வெளியிட்டு அரசிதழில் வெளியிட வேண்டும். மத்திய அரசு அதனை ஏற்று மறு ஆய்விற்கான அறிவிப்பை கைவிட்டு ஒட்டுமொத்த 48 கிராமங்களிலும் டங்ஸ்டன் கனிமவளம் எடுக்கும் திட்டத்தை கொள்கை ரீதியாக கைவிட வேண்டும். திட்டத்தை நிரந்தரமாக கைவிடும் வரை மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

lana
டிச 26, 2024 16:48

இங்கு கருத்து போடும் அனைவரும் தமது பிள்ளைகளை விவசாயம் மட்டுமே படிக்க வைக்கிறீர்கள் ஆ . எல்லோரும் engineering பிறகு தொழில் வேண்டாம் என கூப்பாடு. மேலூர் to sivagangai முழுவதும் மலைகள் வெட்டி விற்பனை செய்ய படுகிறது. tungsten சுரங்கம் வந்தால் சுரண்ட முடியாது. எனவே இந்த எதிர்ப்பு


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 26, 2024 11:44

அரிட்டாபட்டியில் சுரங்கம் தோண்ட அனுமதிக்கலாம் என்று நினைப்பவர்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 26, 2024 11:42

திருப்பினையன் மலை பொற்கோட்டு காரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்த திருமேனி பாதிரிக்குடியார் ரட்சை என்று குறிப்பிடும் 10ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று அரிட்டாபட்டி மலைப்பாறையில் உள்ள கல் சிற்பத்தின் கீழ் உள்ளது.


jayvee
டிச 26, 2024 09:01

அரிட்டாபட்டி விவசாய பகுதியே கிடையாது வெறும் மலைகள் .. அதுவும் க்ரானைட் மலைகள் .. இங்கு கொள்ளையடித்த இரண்டு பெரிய கம்பெனிகள் அரசியல் பின்புலம் கொண்ட அந்த கம்பெனிகள் இன்றுவரை எந்த தண்டனையும் பெறவில்லை ..இன்னமும் இங்கு மலைகள் உடைக்கப்பட்டு கற்கள் திருடப்பட்டு வருகின்றன .. நீதிமன்றமும் உறங்கிக்கொண்டிருக்கிறது .. இந்த மலைகளை செலவில்லாமல் சுலபமாக திருடத்தான் மத்திய அரசிற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அழுத்தகொடுத்தவர்கள் இன்று நல்லவர்களாக நடிக்கிறார்கள் ..


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 26, 2024 11:41

அரசியல் பின்புலத்தை சொல்லும் நீங்கள் அரசியல் வாதியின் மகனாரை சொல்ல மறுப்பது ஏனோ?


ஆரூர் ரங்
டிச 26, 2024 08:20

விவசாயத்தை தவிர மற்ற தொழில்களை தடை செய்து விடலாமே. ஓசிச்சோற மாநில அதிகாரப்பூர்வ உணவு என்று அறிவிக்கலாம்.


Kasimani Baskaran
டிச 26, 2024 06:11

மலங்காட்டை எப்படி வேளாண் மண்டலமாக அறிவிக்க முடியும்.