உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை அவசியம்; முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை

பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை அவசியம்; முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிராமணர்களை இழித்து பேசும் தி.மு.க., வினர் மீது முதல்வர் ஸ்டாலின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி உள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், பிராமண சமூகத்தின் மீதான அவதூறு பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து சமுதாய தலைவர்கள், தமிழக பிராமண சமூகத்தினர் பங்கேற்றனர். கூட்டத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஒய்.ஜி.மதுவந்தி பேசியதாவது: பிராமண சமுதாயம் ஒரு பெரிய சமுதாயம். எல்லாரும் ஒன்று சேர வேண்டும். இந்த சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேச வேண்டியது கிடையாது. ஒரு படம் எடுத்தால் அதில் ஒருத்தர் ஒரு சமுதாயத்தில் இருந்து வருகிறார் என்றால் அதை தைரியமாக சித்தரித்து சொல்ல வேண்டும். அவ்வளவு பெரிய ராணுவ அதிகாரியை பற்றி படம் (அமரன்) எடுக்கிறீர்கள். அவர் ஒரு பிராமணர் என்று காட்டுவதில் உங்களுக்கு என்ன கேடு? யாரை பார்த்து பயப்படுகிறீர்கள்? திரைத்துறையில் நான் இருந்து கொண்டே தான் இதை கேட்கிறேன். மற்ற சமுதாயத்தை பற்றி நேரிடையாக சொல்கிறீர்கள்? பிராமணர் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்? பயத்தை போக்கி தைரியமாக களத்தில் இறங்குங்கள். நடிகை கஸ்தூரி: காஷ்மீரில் நடப்பது மட்டும் இனப்படுகொலை அல்ல. ஒருத்தர் உணர்வை, சமுதாயத்தை அழிப்பதும் இனப்படுகொலை தான். பிறப்பில் இருந்து இறப்பு வரை முக்கியமான அங்கமாக இருக்க வேண்டியது இந்த குலம். கைபர் கணவாய் வழியாக வந்தவர்களை பற்றி பேசினால் உங்கள் ஓட்டு தான் குறையும். தமிழ்நாடு பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்) மாநில தலைவர் என். நாராயணன்: சமீபகாலமாக பிராமண துவேஷம் என்பதை நாம் பொறுத்துக் கொண்டு வந்தோம், சகித்துக் கொண்டு வந்தோம். இப்போது லக்ஷமண் ரேகை என்ற எல்லை கோட்டை அது தாண்டிவிட்டதால் நாமும் களம் இறங்கி இருக்கிறோம். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 400க்கும் அதிகமான கிளைகளை நிறுவியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் பிராமணர்கள் ஒற்றுமை அருமையாக இருக்கிறது. பிராமணர்களை கோழை என்றோ பலஹீனம் ஆனவர்கள் என்றோ நினைத்துவிடக்கூடாது. தமிழகத்தில் 6வது பெரிய சமூகம் பிராமணர்கள். பிராமணர்கள் மனத்தை குலைக்க முயற்சிக்கின்றனர். குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது.அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி தலைவர்: அந்தணர்களை அந்நியர்கள் என்றும், கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்றும் ஒருசில இனவெறி குழுக்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் திராவிட மாடல் என்ற போர்வையில் தொடர்ந்து அந்தணர்களை இழிவுப்படுத்தும் அக்கிரமம் நடக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அந்தணர் சமுதாயம் தமிழ் சமூகத்தில் பிரிக்க முடியாத சமூகம்.ஒருகோடி இந்துகள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். எல்லோருக்குமான திராவிட மாடல் என்று கூறுகிறீர்கள். பிராமணர்களை இழித்து பேசும் உங்கள் கட்சியினரை கண்டிக்க மாட்டீர்கள். இதை முதல்வர் ஸ்டாலின் கண்டித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த சமுதாயத்தை யார் பழித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும். ஆர்ப்பாட்டத்தில், பிராமணர்களை பாதுகாக்க பி.சி.ஆர். சட்டம் போன்ற சட்டத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

Ananthanarayanan Aa
நவ 11, 2024 20:50

திருடன் கிட்ட சாவியை கொடுக்கிறது போல்


vels
நவ 09, 2024 13:58

அர்ஜுன் சம்பத்தே ஒரு சூத்திர இந்து . எடுபிடியாக தான் வைத்து கொள்வார்கள் .வீட்டுக்குள் விட மாட்டார்கள் .புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள்


Sampath Kumar
நவ 06, 2024 13:08

காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட அமோகம் மற்ற சமூகத்தை முட்டாளாக்கி அடிமை படுத்தி கொள்ளை அடித்து கலாசாரத்தை கையெடுத்து அயோக்கியதன் எல்லாம் பண்ணியது அந்த சமாக்கம் இன்னும் திறந்த வில்லை அதுக்கு பேரு என்ன?? ஆணவத்தின் உச்சம் அர்ஜுன் போன்ற அரை வேக்காடுகள் வாங்கின காசுக்கு மேல கூர்வது மடத்தனம்


karutthu kandhasamy
நவ 06, 2024 14:39

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் நீங்க எல்லாம் ஒரு காலத்தில் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடப்போகிறீர்கள்


Madras Madra
நவ 04, 2024 17:14

அனைத்து சமூகத்துக்கும் பொதுவாக இருந்து கிழித்தது போதும் தாம் தங்கள் குடும்பம் என்று வாழ்வதுதான் சிறப்பு அரசியல் உலகம் இன்னும் மோசம் ஆக மாறவே வாய்ப்பு அதிகம் தொழில் நுட்பம் விஞ்ஞானம் என்று கற்று மனித குலத்துக்கு ஏதாகிலும் நன்மை செய்வது பெருமை சேர்க்கும்


Mohan Loganathan
நவ 04, 2024 14:13

திமுகவை ஆதரிக்கும் பிராமணர்கள் யாரும் இல்லை..அதிமுகவில் இருந்தார்கள் இப்போ பாஜகவில் தான் அதிகம் இருக்கிறார்கள் திமுக வின் வாக்கு வங்கி பிராமணர் அல்லாதோர் தான் இருந்தாலும் பிராமணர்களை இழிவு படுத்தி பேசக் கூடாது அவர்களில் அதிக சதவிகிதம் புத்திசாலிகள் அதனால் அவர்களுக்கு உரிய மரியாதையை தர வேண்டும்.


suriyanarayanan
நவ 04, 2024 14:10

வாஸ்து புருஷன் பார்த்து விட்டான் 3 தலைமுறைக்கு பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த நிறுவனம் இல்லை சிதைந்து போய் உள்ளது.3.தலைமுறைக்கு பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கட்சிகள் சிதைந்து சின்னா பின்னமாக போய் உள்ளது.வாஸ்து புருஷன் பார்த்து விட்டான்.


Karuthu kirukkan
நவ 04, 2024 12:01

கனடா நாட்டுலே காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்துக்களையும் இந்து கோவில்களையும் அடித்து உடைத்து அட்டூழியம் செய்கிறார்களாம்


vbs manian
நவ 04, 2024 08:57

என்ன சார் இது ஆடு ஓநாயிடம் சென்று தயவு செய்து கொஞ்சம் பரிவு காட்டு என்று சொல்ல முடியுமா. பிராமணர்கள் ஒரு சிதையாத கட்டுக்கோப்பாக மாற வேண்டும். தேர்தலில் பிராமணர் வோட்டு எல்லாம் ப்ராமண எதிர்ப்பு கட்சிக்கு எதிராக செல்லவேண்டும். ஒற்றுமை மிக மிக அவசியம்.


Karuthu kirukkan
நவ 04, 2024 06:56

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும். இதுவே உலக நியதியும் படைப்பின் சாரமாகும். நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்- வளமுடன் வாழ்க


மோகனசுந்தரம்
நவ 04, 2024 06:28

அவனே ஒரு இந்து பிராமணர் விரோதி. அவனிடமே நடவடிக்கை எடு என்று கேட்டால் நடக்கக் கூடியதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை