உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அர்ஜூன் சம்பத் மகன் கைது

அர்ஜூன் சம்பத் மகன் கைது

சென்னை: நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக நக்கீரன் கோபாலை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 27 ம் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகனும், இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி பேசும்போது,நக்கீன் ஆசிரியர் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக தி.மு.க.,வைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல்ஜலில் என்பவர் கேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஓம்கார் பாலாஜி மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து ஓம்கார் பாலாஜியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முன்ஜாமின் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அவர் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஐகோர்ட் வளாகத்திலேயே அவரை எஸ்பிளனேடு போலீசார் கைது செய்து, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓம்கார் பாலாஜியுடன் ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை திரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

A.Kennedy
நவ 14, 2024 12:30

உலக மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் கோபால், அவரை பற்றி பேசலாமா?


MADHAVAN
நவ 14, 2024 12:11

வாரிசு அரசியல் கூடாதுன்னு சொன்ன நீங்க அர்ஜுன் சம்பத்து மகன் னு போடறீங்க,


Suresh sridharan
நவ 13, 2024 22:09

எவ்வளவு ஸ்பீட் ஹிந்துக்கள் இப்ப குளிர் வேற நல்லா போத்தி கம்பளிக்கு உள்ளே படுத்துக் கொள்ளவும் ஹிந்து அப்படின்னு ஒரு பேர் வந்தால் அத்தனை பேர் மீதும் உடனே கேஸ்


N Sasikumar Yadhav
நவ 13, 2024 22:06

தமிழக காவல்துறை என்பதை பெயர் மாற்றம் செய்து கோபாலபுர ஏவல்தொறை என பெயர் வைத்திடலாம்


நிக்கோல்தாம்சன்
நவ 13, 2024 21:39

புகார் கொடுத்தவர் அப்துல் ஜலீல் , ஆஹா ஆஹா திமுக அரசு எவ்ளோ வேகமா வேலை செய்யுது , ஆமா மாணவர்களுக்கு மது ஊற்றி கொடுத்த பெண்மணிக்கு என்ன தண்டனை கொடுத்தீங்க யுவர் ஹானர் ?


sankaranarayanan
நவ 13, 2024 21:33

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஐகோர்ட் வளாகத்திலேயே அவர் இன்னும் வெளியே வருமுன் அவரை எஸ்பிளனேடு போலீசார் கைது செய்யமுடியுமா என்பதுதான் இப்போது கேள்வி


Amruta Putran
நவ 13, 2024 20:39

DMK is acting fast against opposition parties, but not against Criminals, why?


சமீபத்திய செய்தி