உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டில் கஞ்சா செடி வளர்த்து பசுவிற்கு அளித்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து பசுவிற்கு அளித்தவர் கைது

திருப்பத்துார் : திருப்பத்துார், பெரியார் நகரை சேர்ந்தவர் பாபு, 43; இவர், தன் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து, அதை தான் வளர்க்கும் பசுவிற்கு தீவனமாக அளித்து வந்தார். இது குறித்த புகாரை தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், 'வீட்டின் பின்புறம் புற்களை வளர்த்து பசுவிற்கு தீவனமாக கொடுத்து வருகிறேன். அதில், ஒரு செடி வளர்ந்து வந்தது. அது கஞ்சா செடி என எனக்கு தெரியாது. புல்லை தீவனமான பசுவிற்கு கொடுக்கும் போது, அதையும் சேர்த்து கொடுத்தேன். மற்றபடி வேறு எதுவும் தெரியாது' என்றார். போலீசார் அதை ஏற்க மறுத்து, பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி