உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யோகா விளையாட்டு அல்ல!: சத்குரு கருத்து

யோகா விளையாட்டு அல்ல!: சத்குரு கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : 'யோகா ஒருவருடன் மற்றொருவர் போட்டி போட்டு செய்யக்கூடிய விளையாட்டாக இருக்க முடியாது. மனிதர்களை எல்லையற்ற உணர் திறன், வாழ்க்கை அனுபவத்திற்கு உயர்த்துவதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவி' என, சத்குரு தெரிவித்துள்ளார்.ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 44வது பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் வரும் 2026ல் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் யோகாவும் இடம்பெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

போட்டி விளையாட்டுகளின் அரங்காக இருக்கும் ஒரு இடத்திற்குள், 'யோகா' நுழைவது வேதனை, ஏமாற்றத்தை அளிக்கிறது. யோகா ஒரு போட்டியாக இருக்க முடியாது. யோகா என்பது, மனிதர்களை வரையறுக்கப்பட்ட சாத்தியங்களில் இருந்து, எல்லையற்ற உணர்வுத் திறன், வாழ்க்கை அனுபவத்திற்கு உயர்த்துவதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவி மற்றும் சுய பரிணாம வளர்ச்சிக்கான தொழில் நுட்பமாகும். இதை வேறு யாருடனும் போட்டியாக செய்யக்கூடாது. இதன் மூலம் சக்தி வாய்ந்த யோக அறிவியலை, மற்றொருவரை விட சிறப்பாக செய்ய முயற்சிக்கும் சர்க்கஸ் போன்ற செயல்முறையாக நாம் குறைத்து விடுவோம். யோகாவின் அடிப்படை விழிப்புணர்வை பற்றியது, ஒப்பீடு செய்வதையும், போட்டி போடுவதையும் பற்றியது அல்ல. யோக அறிவியலின் பிறப்பிடமாக விளங்குகிறது. இது ஒரு அபத்தமான விளையாட்டாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விவேகம் இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

enkeyem
செப் 13, 2024 11:48

யோகா என்பது அதை முறையாக பயின்று தொடர்ந்து கடைப்பிடித்து வருபவர்களுக்கு அதன் அருமை மட்டும் மகத்துவம் தெரியும். யோகா பற்றி தெரியாத நபர்கள் தான் அதை இந்து முறை பயிற்சி என்றும் பணம் சம்பாதிக்கும் காசுபணம் சம்பாதிக்கும் வழி, அதிக லாபம் தரும் பிசினஸ், கற்பனை என்று உருட்டுவார்கள்


Premanathan Sambandam
செப் 13, 2024 10:15

யோகா விளையாட்டு அல்ல உண்மைதான் அது ஒரு அதிக லாபம் தரும் பிசினஸ் இந்த உண்மையை ஓப்பனாக சொல்லக்கூடாது


Velan Iyengaar
செப் 13, 2024 09:48

காசு பண்ணும் கருவி ... அத போய் விளையாட்டுக்கு கூட விளையாட்டு என்று சொல்லி பிழைப்பில் மண் அள்ளி போட்டுடக்கூடாது ..ஆக்கஞ்ங் ...


karthik
செப் 13, 2024 09:30

அது உன் கற்பனை ...


சிவா அருவங்காடு
செப் 13, 2024 08:37

கொடுக்கும் மனம் இருந்தால் எல்லாம் கிடைக்கும்


Mani . V
செப் 13, 2024 05:59

அந்த யானைகளின் வழித்தடம்?


ஆரூர் ரங்
செப் 13, 2024 11:03

யானைக்கொடியுடன் கட்சி துவங்கிய ஜோசப்பிடம் கேளுங்க.


enkeyem
செப் 13, 2024 11:40

யானை வழிதடத்தில் ஈஷா யோகா மையம் இல்லை என்பதை வருவாய்த்துறை, சம்பத்தப்பட்ட நகராட்சி, மற்றும் நீதி மன்றம் ஆகிய அனைத்தும் உறுதிப்படுத்திவிட்டது. தூக்கத்திலிருந்து விழித்தெழு. சமீபத்திய நாட்டு நடப்புக்களை தெரிந்து கொண்டு கருத்தெழுது


Kasimani Baskaran
செப் 13, 2024 05:28

யோகா என்பது யோகமாயையில் இருந்து ஒரு ஆத்மா விடுபட அவசியமான மன மற்றும் உடலை ஒருங்கிணைத்த பயிற்சி. அதை சரியாக செய்தால் பல பரிமாணங்கள் தானே தெரியவரும். உணர் திறன் வெகுவாக அதிகரிக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை