உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துப்பாக்கி சுடும் போட்டி ஏ.எஸ்.பி., அசத்தல்

துப்பாக்கி சுடும் போட்டி ஏ.எஸ்.பி., அசத்தல்

சேலம்: சேலம் நகர மலை அடிவாரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி திடலில், போலீஸ் அதிகாரிகளுக்கான போட்டி இன்று (நவ.,13) நடந்தது. சேலம் மாநகரம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தமிழக சிறப்பு போலீஸ் படையினர் என, 14 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பிஸ்டல் பிரிவில் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன்(வடக்கு), நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஏ.எஸ்.பி., மன்னம் சுஜித் சம்பத் முதலிடம்; சிறப்பு போலீஸ் படையின் மகேஸ்வரி, 2ம் இடம்; நாமக்கல் டி.எஸ்.பி., ராஜேஸ்வரன், 3ம் இடம் பிடித்தனர். ரைபில் பிரிவில் நாமக்கல் எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக் முதலிடம், ஏ.எஸ்.பி., மன்னம் சுஜித் சம்பத், டி.எஸ்.பி., ராஜேஷ்வரன், 2ம் இடம், மகேஸ்வரி, 3ம் இடம் பிடித்தனர். ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட, ஏ.எஸ்.பி., மன்னம் சுஜித் சம்பத் முதலிடம், துணை கமிஷனர் பாஸ்கரன், 2ம் இடம், சிறப்பு போலீஸ் படை மகேஸ்வரி, 3ம் இடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி