உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு

சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: பட்ஜெட் விவாதம் முடிந்த நிலையில், சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம், 9ம் தேதி துவங்கியது. பின், 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை, கவர்னர் உரை மீது விவாதம் நடந்தது. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், மீண்டும் 19ம் தேதி கூடிய சட்டசபையில், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதைதொடர்ந்து, 20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு பட்ஜெட் மீதும், நேற்று முன்தினம் காலையும், மாலையும் விவாதம் நடத்தப்பட்டது. அதற்கு நேற்று அமைச்சர்கள் பதிலுரை வழங்கினர். பின், சில சட்ட மசோதாக்களும், சட்ட திருத்த மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, சட்டசபையை ஒத்திவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதன்படி, சபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை