உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறுப்புகளை ஒப்படைத்து புறப்பட்டார் ஆதீனம்

பொறுப்புகளை ஒப்படைத்து புறப்பட்டார் ஆதீனம்

தஞ்சாவூர்: திருமணம் செய்து கொண்ட சூரியனார் கோவில் ஆதீனம், ஊர் மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அறநிலைத்துறை அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்து புறப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோவில் ஆதீனமாக, திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த, மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், 28வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்தார். இந்நிலையில், 54 வயதான இவர், கடந்த மாதம், பெங்களூரை சேர்ந்த ஹேமாஸ்ரீ, 47, என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.இதையடுத்து, சூரியனார்கோவில் ஆதீன ஸ்ரீ கார்யங்களில் ஒருவரான சுவாமிநாத சுவாமிகள், 'ஆதீனமாக பதவி வகிக்கும் தகுதியை அவர் இழந்து விட்டார்' என்றார். இதையடுத்து, ஸ்ரீ கார்யமான சுவாமிநாத சுவாமியை, ஆதீனத்தில் இருந்து நீக்குவதாக கூறி மகாலிங்கசுவாமி நோட்டீஸ் அனுப்பினார்.இந்நிலையில், நேற்று மாலை சூரியனார்கோவில் மடத்திற்கு வந்த கிராம மக்கள் சிலர், மகாலிங்க சுவாமியை சந்தித்து, 'ஆதீனமாக நீடிக்க வேண்டாம். மடத்தை விட்டு வெளியேற வேண்டும்' என வலியுறுத்தினர். இதையடுத்து, இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மடத்தை விட்டு ஆதீனம் வெளியே வந்தார். மடத்தின் வாசல் கதவை பொதுமக்கள் பூட்டினர்.பின், சூரியனார்கோவில் ஆதீன நிர்வாக பொறுப்புகளை, அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பதாக கூறி, கதிராமங்கலம் ஆய்வாளர் அருணாவிடம் கடிதம் மூலம் ஆதீனம் அளித்தார். பின், நிருபர்களை சந்தித்த அவர், ''முழு பொறுப்பையும் ஒப்படைக்கவில்லை. வேறு இடத்தில் போய் ஓய்வெடுக்கப் போகிறேன்; கர்நாடகா செல்லவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankar
நவ 15, 2024 13:28

கடவுள் நம்பிக்கை அற்ற கசாப்புக்கடைக்காரர்களின் அரசிடம் ஆதீனத்தை எப்படி ஒப்படைத்தீர்கள் - ஒரு தாய் போல இருக்க வேண்டும் அல்லவா மடாதிபதி - செய்த தவறுக்காக வெளியேறினீர்கள் - நன்றி - ஆனால் -நாம் இல்லாத மேடம் இருக்கக்கூடாது என்று முடிவு செய்வதை கடவுள் மன்னிக்கமாட்டான் - கருடபுராணம் படியுங்கள் - தெரியும்


என்றும் இந்தியன்
நவ 14, 2024 17:16

எல்லாமே சரிதான் குடும்ப செலவுக்கு என்ன செய்து சம்பாதிப்பாய் குழந்தாய்???


Indian
நவ 14, 2024 09:32

தைரியமாக மண முடித்து ஆதீனத்தை விட்டு வெளியேறியது என்னைப்பொறுத்தவரை பாராட்ட வேண்டிய செயல்தான்.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 13, 2024 23:40

ஒரு விதத்தில் இந்த சாமியாரை பாராட்டலாம். தைரியமாக மண முடித்து ஆதீனத்தை விட்டு வெளியேறியது என்னைப்பொறுத்தவரை பாராட்ட வேண்டிய செயல்தான்.


Iniyan
நவ 13, 2024 23:38

தி மு க காரர்கள் கொள்ளை அடிக்க நல்ல வாய்ப்பு. ஆதீன சொத்துக்கள் அம்போதான்


Rajarajan
நவ 13, 2024 12:29

என்னது தனிமைல ஓய்வா? சரியான வில்லங்கம் பிடிச்ச ஆளு.


sankar
நவ 13, 2024 11:50

நரியிடம் நாட்டாமை - விளங்கும்


G Mahalingam
நவ 13, 2024 09:53

திமுகவுக்கு இரண்டு லட்டு தானாக வருகிறது. திமுகவுக்கு மச்சம் எங்கேயோ இருக்கு.


M Ramachandran
நவ 13, 2024 09:30

இனி என்ன பாம்பின் வாயில் அகப்பட்டா தேரை கதிதான் மட சொத்து இனி கோபல புறம் சோத்தாகி விடும். காகைய்ய உட்கார பணம் பழம் விழுந்த கதையாகா அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு வசம்.


கனோஜ் ஆங்ரே
நவ 13, 2024 11:25

அந்த சொத்து போகுறது இருக்கட்டும்.. கஷாய காவி உடை போட்டவனுங்க எல்லாரும் சாமின்னீங்க... மகாபுருஷர்..னீங்க... அந்தாளு இன்னாடான்னா, ஆண்டிய ஓட்டிகிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டாரு? அவர் திருமணம் செய்து கொண்டதை கொச்சைப் படுத்தவில்லை... மதகோட்பாடுகள் மனித உணர்ச்சிகளுக்கு உட்பட்டதுதான், கட்டுப்பட்டதுதான்... இதுல... இந்துமதம், கிறித்துவமதம், இஸ்லாமிய மதம்...னு பேதம் பார்ப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டத்தான் சொல்கிறேன்... மனிதர்களில் நல்லவர்களும் உண்டு... கெட்டவர்களும் உண்டு. அதுக்காக, எத்தனை கஷாய உடை அணிந்தவர்கள் முறைதவறி வாழ்கிறார்கள்... அதனை நியாப்படுத்த கூடாது... உன்னைப் போன்ற ஆட்கள்...?


sankar
நவ 13, 2024 11:52

பிள்ளை இல்லாத வீடு சொத்தை புடிக்க தின்பது அரசின் வேலையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை