உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சினிமா காட்சிகளை மிஞ்சிய சம்பவம்; ஏ.டி.எம்., கொள்ளையர்களை சுட்டுபிடித்த தமிழக போலீஸ்; ஒருவர் பலி!

சினிமா காட்சிகளை மிஞ்சிய சம்பவம்; ஏ.டி.எம்., கொள்ளையர்களை சுட்டுபிடித்த தமிழக போலீஸ்; ஒருவர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாமக்கல்: கேரளாவில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடித்து விட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை, நாமக்கல் மாவட்ட போலீசார் துப்பாக்கி முனையில் சுட்டு பிடித்தனர். ஒருவர் உயிரிழந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6mda1gro&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்., மையங்களில் நேற்று நள்ளிரவு கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. கேஸ் கட்டர் மூலம் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய மர்ம நபர்கள் கிட்டத்தட்ட 66 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றனர். மேலும் வேறு ஒரு பகுதியில் இருந்து ஏடிஎம் எந்திரம் ஒன்றையும் அலேக்காக கடத்திச் சென்றுள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று தடயங்களை சேகரித்து புலன் விசாரணையை துவக்கினர். முதல் கட்ட விசாரணையில் வெள்ளை நிற கார் ஒன்று இந்த சம்பவத்தின் போது சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்றதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, தொடர் விசாரணையில் வடமாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில் பணம் மற்றும் வெள்ளை காருடன் கொள்ளை கும்பல் வழி எங்கும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் தமிழக, கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் கன்டெய்னர் லாரி ஒன்று விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்வது தெரியவந்தது. பொது மக்கள் புகாரை தொடர்ந்து, உடனடியாக அந்த லாரியை போலீசார் மடக்கி பிடிக்க முற்பட்டனர். போலீசார் பின்தொடர்வதை அறிந்ததும், அதில் இருந்த கொள்ளையர்கள் கன்டெய்னர் லாரியுடன் சினிமா பாணியில் அசுர வேகத்தில் தப்பிக்க முயற்சித்தனர். போலீசாரும் விடாமல் வெவ்வேறு வாகனங்களில் சேசிங் செய்ய, குமாரபாளையம் பகுதியே பரபரப்பானது. கிட்டத்தட்ட 30 இருசக்கர வாகனங்களில் போலீசார் லாரியை விரட்டிச் சென்றனர். நடு வழியில் லாரியை மடக்கி பிடித்த போது உள்ளே இருந்த கொள்ளையர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் காவல் ஆய்வாளர்கள் தவமணி, ரஞ்சித் ஆகியோர் காயம் அடைந்தனர்.தற்காப்புக்காக போலீசாரும் துப்பாக்கியால் சுட, ஒருவன் சம்பவ இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொருவன் படுகாயம் அடைய அவனை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மற்ற கொள்ளையர்கள் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுவிட, அவர்களை போலீசார் தீவிரமாக தேடி 5 பேரையும் வளைத்து பிடித்தனர்.சிக்கிய லாரியில் சோதனை நடத்திய போது உள்ளே கட்டுக்கட்டாக பணம், ஏ.டி.எம் எந்திரம், வெள்ளை நிற சொகுசு கார் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் கன்டெய்னர் லாரியை வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு அடுத்தக்கட்ட விசாரணைக்காக கொண்டு சென்று உள்ளனர்.கன்டெய்னர் லாரி யாருடையது? காரின் உரிமையாளர் யார்? கொள்ளை கும்பலில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். தொடக்க விசாரணையில் கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வட மாநிலங்களில் இதேபோன்று கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியவர்கள் என்பதையும் கண்டுபிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

sanil xavier
செப் 28, 2024 09:08

கருத்துக்களை பதிவிடும்போது உருப்படியாக ஏதாவது பதிவிடுங்கள். எல்லாமே உளறலும் வன்மமும் தான்.


Ramesh Sargam
செப் 27, 2024 20:53

மறதியில், எப்பொழுதும் கொடுப்பதுபோல நமது முதல்வர் அந்த பலியான கொள்ளையனுக்கு பத்து லட்சம் என்று ஏதாவது நிவாரண நிதி கொடுத்து விடப்போகிறார் பார்த்துக்கொள்ளுங்கள்.


கத்தரிக்காய் வியாபாரி
செப் 27, 2024 19:43

66 லட்சத்துக்கு இத்தனை அக்கப்போறா ?. இதுக்கு தீயமுகவில் சேர்ந்தால் உடனே சம்பாரிச்சுடலாம்.


Devanand Louis
செப் 27, 2024 20:18

தி மு க வில் சேர்ந்தால் நிச்சயம் இலக்கை எட்டிவிடலாம்


முருகன்
செப் 27, 2024 15:54

இது தமிழ் நாடு என்பதை மறந்து விட்டார்கள் தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்


Bala
செப் 27, 2024 18:28

திருட்டுத் திராவிடியன்கள் ஆட்சியில் கஞ்சா, கள்ளச்சாராயம், போதைக்கும் மறை முகமாக உதவும் உ பி கள் ?


TRUE INDIAN
செப் 27, 2024 14:58

சாரி பாஸ், எங்களுக்கு லட்சம் கொடிகளில்தான் கொள்ளை அடிக்க தெரியும். இது கட்டாயமாக வட மாநிலத்தவர்கள் செயல்தான்


Nandakumar Naidu.
செப் 27, 2024 14:41

இவர்களிடம் கறக்கவெண்டிய வேண்டிய விஷயங்களை வெளிக்கொணர்ந்து விட்டு பிறகு இவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ள வேண்டும். இந்த சமூக விரோதிகள் வாழ தகுதியற்றவர்கள்.


Saai Sundharamurthy AVK
செப் 27, 2024 14:22

திராவிட திருடர்கள் இது போல் தான் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு செல்கிறார்களோ !!! ஏனெனில், வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு விடும் போது பணம் அந்த அளவு சிக்குவதில்லை.


ponssasi
செப் 27, 2024 14:15

விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதனால் போலீஸ் சுற்றிவளைத்து. பின்னர் தான் போலீசுக்கே அவர்கள் கொள்ளையர்கள் என தெரிந்தது.


Mohan
செப் 27, 2024 14:15

திறமையும், துப்புத்துலக்க திறனறிவும் இருக்கிற தமிழக போலீஸார் அதை ஆளுங்கட்சிக்கு சாதகமாக பயன்படுத்தாமல் இம்மாதிரி , மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உதவியாக செயல் பட்டால் தமிழ்நாடு போலீஸ் ""ஸ்காட்லாண்டு யார்டு "" போலீஸூக்கு நிகர் என தைரியமாக கூறலாம். நற்பணி தொடரட்டும்


SUBRAMANIAN P
செப் 27, 2024 13:43

போலீசாருக்கு பாராட்டுக்கள். இதேபோல ஆட்சி, அரசியல் போர்வைக்குள்ள ஒளிஞ்சிகிட்டு கொள்ளை அடிக்கிறவங்களையும் சுட்டு பிடிக்கணும். முடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை