வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாட்டில் ஒரு ரௌடிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் நாடு எங்க சார் போகுது?
திருநெல்வேலி : தி.மு.க.,மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் மீது சில்வர் டம்ளரால் தாக்கியதில் காயமுற்றார்.திருநெல்வேலியை சேர்ந்தவர் பெருமாள் 65.தி.மு.க., மாநில நெசவாளர் அணி செயலாளராக உள்ளார். இவர் தாமிரபரணி இன்ஜினியரிங் கல்லூரியில் துணை சேர்மனாக நிர்வகித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரியில் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. அப்போது அவருக்கும் சேர்மன் பால்ராஜ் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவரை ஒருவர், டேபிளில் இருந்த செல்வர் டம்ளரால் கையில் தாக்கியுள்ளார். இதில் கையில் காயம் ஏற்பட்டது. காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நாட்டில் ஒரு ரௌடிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் நாடு எங்க சார் போகுது?