உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த சோதனை விவகாரத்தில் பொய்யான தகவலை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சி நடக்கிறது என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.சென்னை டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை விதிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வவு விசாரித்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின்போது, ' சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தினோம் என அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oan7t8wi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை அளித்த விளக்கத்தில் ' டாஸ்மாக் அலுவலக சோதனையின் போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை. பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்க வைக்கப்படவில்லை. பொய்யான தகவல்களை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சி நடக்கிறது' எனத் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Subash BV
ஏப் 18, 2025 20:14

Congrats. STALIN staying with the HELP of converted guys. Whats his present assets. Any idea.


NIyayanidhi
ஏப் 18, 2025 06:21

எதற்கு இத்தனை ராமாயணம். உடனே திராவிட மாடல் அரசை கலைத்து கவர்னர் ஆட்சியை அமல்படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.


xyzabc
ஏப் 18, 2025 00:49

மாடல் ஆட்சி காரர்கள் திசை திருப்புவதற்காக நிறைய உருட்டல்களை ஏற்பாடு செய்து உள்ளனர். சந்தேகம் இல்லை


Thetamilan
ஏப் 17, 2025 23:48

திசை திருப்பவே அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை


RAMESH
ஏப் 17, 2025 23:05

அமலாக்க துறை விசாரணை நடத்தி விட்டு அமைதியாக இருந்தது....அப்பாவின் ஆலோசனை படி கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.....இனி யாரும் தப்ப முடியாது... கெஜ்ரிவால் போல்...... பொறுத்திருந்து பார்ப்போம்


Pandianpillai Pandi
ஏப் 17, 2025 22:13

அரசு அதிகாரிகள் தேச விரோதிகளா? அவர்களை பிடிக்கவே முடியாதா? தவறு செய்கிறவர்கள் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தர முடியாதா? கோடிக்கணக்கில் கடன் வாங்கி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் கோடிஸ்வரர்கள் ஒருவரையாவது நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறதா இந்த அமலாக்க துறை. ரிசர்வ் வங்கி லட்சக்கணக்கில் மத்திய அரசுக்கு நிதி தந்திருக்கிறது. அதெல்லாம் முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? என்பதெல்லாம் ஆராயலாமா? வணிக வரித்துறையில் முறைகேடு இல்லை என்று ஒப்புக்கொள்ளுமா இந்த அமலாக்க துறை. மக்களுக்காக குரல் கொடுத்தால் அவர்கள் மீது எதாவது வழக்கு தொடுத்து மடை மாற்றுவது ஒரு சிறந்த அரசியல்தன்மையாகி விடுமா? மக்கள் ஒரு போதும் இதை சிறந்த அரசியல் யுக்தி என்று சொல்ல மாட்டார்கள். தி மு க ஒரு சிறந்த ஜனநாயக கட்சி மக்களின் ஏகபோக நன்மதிப்பை பெற்ற கட்சி. மக்களிடம் இருந்து ஒருபோதும் தி மு க வை பிரித்துவிட முடியாது.


GMM
ஏப் 17, 2025 22:08

குற்றச்சாட்டு சட்ட விரோத பண பரிவர்த்தனை. சட்ட விரோத பரிவர்த்தனை இல்லை என்றால் மட்டும் தான் அமுலாக்க துறை நீதிமன்றம் படி ஏற வேண்டும். அதிகாரிகள், ஊழியர்கள் ,வக்கீலை அமுலாக்க துறை அலுவலகம் வரவழைத்து பதில் பெற வேண்டும். கவர்னர் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.


KSB
ஏப் 17, 2025 21:35

It happens only in Tamil Nadu.


sankaranarayanan
ஏப் 17, 2025 21:07

நீதி அரசர்கள் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முழுவதும் படித்துவிட்டு சந்தேகம் இருந்தால் அவர்களையே முழுதும் விளக்கச் சொல்லலாம் . இந்த வழக்கை திசை திருப்பவே திராவிட மாடல் அரசு முழுவதும் முயற்சிக்கும். சிறிதுகூட அவர்களுக்கு இடம் கொடுக்காமல் அங்கே நடந்த ஊழலை முன்னிலைப்படுத்தி வழக்கை விசாரிக்க வேண்டும் 1000-கோடி ஊழல் திராவிட மாடல் அரசால் முழுவதும் மறைக்கப்படும் அதற்கு உடந்தையாக போகக்கூடாது


Tetra
ஏப் 17, 2025 21:40

த்ராவிடத்திற்கு உச்ச நீதிமன்றம் உள்ளது. ஆர்ட்டிகிள் 142 வைத்திருக்கிறார்கள்


Ramesh Sargam
ஏப் 17, 2025 21:02

வழக்கை திசை திருப்புவார்கள் திமுகவினர். சில நேரங்களில் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளை அச்சுறுத்தவும் செய்வார்கள் இந்த திமுகவினர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை