உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடின உழைப்பாளி நீதிபதியை அச்சுறுத்துவதற்கான முயற்சி; அண்ணாமலை காட்டம்

கடின உழைப்பாளி நீதிபதியை அச்சுறுத்துவதற்கான முயற்சி; அண்ணாமலை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இண்டி கூட்டணியின் பதவி நீக்கத் தீர்மானம், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்தும் ஒரு கடின உழைப்பாளி நீதிபதியை அச்சுறுத்துவதற்கான ஒரு முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: ஹிந்து விரோத திமுக அரசின் கோபத்தை எதிர்கொண்டுள்ள முருகன் பக்தர்களுக்கு ஆதரவாக நின்ற பெங்களூரு தெற்கு பார்லிமென்ட் எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு மனமார்ந்த நன்றி. இண்டி கூட்டணியின் பதவி நீக்கத் தீர்மானம், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்தும் ஒரு கடின உழைப்பாளி நீதிபதியை அச்சுறுத்துவதற்கான ஒரு முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை.நீதிபதி சுவாமிநாதனின் சாதனை, 8க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தீர்க்கப்பட்ட 73,505 முக்கிய வழக்குகள், அவரது பணி முக்கியமானதாகும். காலை 9 மணிக்கு நீதிமன்ற பணியை தொடங்கி மாலை வரை தொடர்கிறார்.சுதந்திர நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் திமுகவின் முயற்சி, காங்கிரசின்எமர்ஜென்சி காலகட்டத்தில் இருந்து உத்வேகத்தைப் பெறுகிறது. அவர்கள், நீதிமன்றங்களை அச்சுறுத்தினர், மேலும் இந்தியாவின் நீதி அமைப்பின் அடித்தளத்தையே மாற்ற முயற்சித்தனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ram
டிச 12, 2025 12:10

குடும்பமாக கொள்ளையடிப்பதில் கோல்டு மெடல் வாங்கியவர்கள் நீதி துறையை வளைக்க பார்க்கிறார்கள்


bharathi
டிச 12, 2025 12:02

unfit to be the part of human society


சந்திரசேகர்
டிச 12, 2025 09:38

இதுல என்ன பிரச்சினை என்றால் இவர் ஆர் எஸ் பாரதி சொன்ன இட ஒதுக்கீடு நீதிபதி இல்லை என்று நினைக்கிறேன்


Munusamy
டிச 12, 2025 08:53

பாவத்தை செய்பவன் படுகுழியில் விழுவான் இறைவனிடம் கோவத்தை உண்டு பண்ணுபவன் அடியோடு அழிவான் அழிவான் இறைவன் ஒருவனே மனிதன்தான் அவரவர் வழியில் வழிபடுகிறான் இதை அரசியல்வாதிகள் சாதகமாக பயன்படுத்துகிறார்கள்


பாலாஜி
டிச 12, 2025 08:00

நீதிபதிகள் எவருக்கும் கடின உழைப்பு அலுவல்கள் கிடையாது அண்ணாமலை.


vivek
டிச 12, 2025 12:00

உனக்கு எப்படி தெரியும்


D.Ambujavalli
டிச 12, 2025 06:27

அதிமுக ஆட்சியில் கொடைக்கானல் தீர்ப்புக்காக, வக்கீல்/ நீதிபதி வீட்டு மின் இணைப்பு, நீர் இணைப்பை துண்டித்த சிறுபிள்ளைத்தனம் நாடாக்கவில்லையா? நீதிபதிகள் இவர்களுக்கு ஆமாம் சாமி போடும் கொத்தடிமைகள் என்ற அகம்பாவத்தின் வெளிப்பாடுதான் இது


Kasimani Baskaran
டிச 12, 2025 05:33

அறிவில்லாத கோட்பாடுகளுக்கு அடிமைப்பட்டு விட்டால் சிந்திக்கும் திறன் சுத்தமாக மறந்து போகும். தீர்ப்பு சொல்லுவது எளிதான காரியம் அல்ல. தீர சட்டத்தை ஆராய வேண்டும். பல கேள்விகளை கேட்டு அதற்கான பதிலை பெற வேண்டும். ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜோடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் - அதை எளிதில் உடைக்க ஸ்வாமிநாதன் ஒருவரால் மட்டுமே முடிந்தது. அப்பீல் செய்ய முடியாத அளவில் தெளிவான தீர்ப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் கதற அதுதான் காரணம்.


Rajkumar Ramamoorthy
டிச 12, 2025 03:40

தீப தூணில் ஆராய்ச்சி ...மானம் கெட்ட இந்து விரோத அரசு


சிட்டுக்குருவி
டிச 11, 2025 23:57

நம்ம ஊரு அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே மாதிரிதான் செயல்படுகிறார்கள் .எல்லோருமே பேப்பர் புலிகள் .வேட்டையாடமாட்டார்கள் .ஒரு அநீதி ஏற்படுகின்றதென்றால் அதன் மூல காரணம் என்னவென்றறிந்து அதை வேரறுக்கவேண்டும் .அதற்க்கு காலம் ,பணம் விரயம் ஏற்படலாம் .அதற்க்கு தேவையான மனிதவளத்தை கண்டறிந்து வடிவமைத்து ,தேவையான நிதித்தேவையை விருப்பமுள்ள மக்களிடம்பெற்று நடைமுறை படுத்தலாம் .உதாரணத்திற்கு தீப நிகழ்ச்சி .இது எதனால் நிகழ்ந்தது .மூலகாரணம் அரசு வழிபாட்டுத்தலங்களை அரசுடைமையாக்கியது .சட்டத்தில் இடமிருக்கின்றதா ?எந்த சட்டம் அனுமதிக்கின்றது என்பதை நாமிதுவரையில் ஆராயவே இல்லை . அரசியல் அமைப்பு சட்டம் Article 26ம் 27 ம் தமிழக அரசால் மீறப்பட்டிருக்கின்றது என்பதையே இன்னும் யாரும் அறிந்தபாடில்லை . உச்சநீதிமன்றம் Regulate என்ற ஒருஆங்கில வார்த்தையை தவறான புரிதலோடு அரசு வழிபாட்டுத்தலங்களை நிர்வகிக்கலாம் என்ற தீர்ப்பு எழுதியபோது மக்களோ அல்லது நீதிமான்களோ இதை மறுபரிசீலனை செய்யவில்லை . அரசியல் அமைப்பில் சொல்லியிருப்பது என்னவென்றால் அரசு public order ,health ,morality இவைகளை regulate செய்யலாம் என்பதுதான் .யாரும் சொத்துக்கள் பராமரிப்பதை ஆங்கிலத்தில் regulate என்று சொல்லமாட்டார்கள் .சொத்துக்கள் பராமரிப்பதை ஆங்கிலத்தில் maintenance அல்லது administer என்றுதான் சொல்லுவார்கள் .இந்த தவறான தீர்ப்பு தான் அரசு வழிபாட்டுத்தலங்களை கையகப்படுத்தியது .இன்னொரு விஷயம் மக்கள்மனதில் உதிக்காதது அரசியல் சட்டத்தில் எங்குமே எந்த ஒரு தனிப்பட்ட மதத்திற்கு என்று வடிவமைக்கப்படவில்லை .எல்லா மதங்களுக்கும் ஒரே சட்டம்தான் .அப்படியிருக்கும்போது அரசு கிருத்துவமத சொத்துக்களை ,இஸ்லாம் மதத்தின் சொத்துக்களை நிர்வகிக்காமல் ஹிந்து மத சார்ந்த சொத்துக்களைமட்டும் நிர்வகிக்கும் அதிகாரம் எங்கிருந்துவந்தது . அரசியல் அமைப்பு சட்டம் Article 26 இல் சந்தேகத்திற்கு இடமின்றி அந்தந்த மதங்கள் சார்ந்த சொத்துக்களை அவரவர்களே நிர்வகித்துக்கொள்ளலாம் என்றுதான் சொல்கின்றது .தமிழக அரசு அரசியல் அமைப்பு சட்டங்கள் Article 26ஐயும் எந்த ஒரு மதம் சார்ந்த செலவினங்களையும் மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவிடக்கூடாது என்ற Article 27 ஐயும் அப்பட்டமாக மீறிவந்துகொண்டிருக்கின்றது .இதை உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பு பெஞ்ச் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுத்தால் ஒழிய வழிபாட்டுத்தலங்களை மீட்டெடுக்கமுடியாது .இதை படிக்கும் அன்பர்கள் தயவு செய்து அண்ணாமலை அவர்களுக்கும் அவரைப்போன்ற ஆர்வமுள்ளவர்கள் பார்வைக்கு கொண்டு செல்லவும் .


Priyan Vadanad
டிச 11, 2025 23:18

சுவாமியை இந்தியாவின் தலைமை தீர்ப்பாளியாக்கும்வரை ஓயமாட்டார்கள் என்று மட்டும் தெரிகிறது. அவரது போட்டோவை எல்லா செய்திகளிலும் போடுவது அவரை பிரபலப்படுத்தவா அல்லது மற்றவர்களை பயமுறுத்தவா?


vivek
டிச 12, 2025 06:05

ஓங்கி நடு மண்டையில் ஒரு குட்டு விழும் வரை வடை பிரியன் ஓயமாட்டார்


கண்ணன்,மேலூர்
டிச 12, 2025 14:20

எப்போதும் இந்துக்களுக்கு எதிரான கருத்தையே பதிவிடுகிறாய்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை