வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Arrest
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே, மதுாரைச் சேர்ந்த பா.ம.க., நிர்வாகிகள் செல்வராஜ், வினோத், விக்னேஷ், சந்தோஷ்குமார், சேகர் ஆகியோரிடம், சில வாரங்களுக்கு முன், கஞ்சா போதையில் வந்த பாதிரி காலனியை சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்ட, 5 பேர், தகராறு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரு தரப்பினரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். நிபந்தனைப்படி, அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில், பா.ம.க. நிர்வாகிகள் கையெழுத்திடும்போது, அங்கு வந்த விஜயகுமாரும் மற்றவர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். பா.ம.க., நிர்வாகி வினோத்தை, சப் - இன்ஸ்பெக்டர் தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் கண் எதிரிலேயே, விஜயகுமாரும் மற்றவர்களும் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றனர். அப்பகுதியில் நிலவும் கஞ்சா புழக்கமே, இதற்கு காரணம். - அன்புமணி தலைவர், பா.ம.க.,
Arrest