உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி: டிஜிபியிடம் சவுக்கு சங்கர் திடுக்கிடும் புகார்!

கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி: டிஜிபியிடம் சவுக்கு சங்கர் திடுக்கிடும் புகார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''சென்னை போலீஸ் கமிஷனர் வருண், சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் ஆகியோர் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்,'' என டிஜிபியிடம் யுடியூபர் சவுக்கு சங்கர் மனு அளித்துள்ளார்.இதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் இருவரும் கூலிப்படையை வைத்து என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று எனக்கு தகவல் கிடைத்தது. எனது உயிருக்கு ஆபத்து இருந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். இருப்பினும், அதிகாரிகள் கொலை செய்யும் அளவுக்கு துணிய மாட்டார்கள் என நினைத்து இருந்தேன். 2024 மே மாதம் கைதாகி கோவை சிறையில் இருந்த போது உள்ளே என் மீது கடுமையாக தாக்கப்பட்டு வலது கைகளில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.நீதித்துறை காவலில் சிறை செல்லும் போது தாக்குதல் நடப்பது என்றால், அதிகாரிகள் எந்த எல்லைக்கு செல்வார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். திருச்சியில் வருண் குமார் எஸ்பியாக இருக்கும் போது, என்னை காவலில் எடுக்க முயன்று எனது உணவில் விஷம் வைக்க முயற்சி நடந்தது. கவர்னர் அளவில் தலையிட்டாதல் அது நடக்கவில்லை.என் மீது இரண்டு முறை குண்டர் சட்டம் பாய்ந்தது. எனது பேச்சை நிறுத்த வேண்டும், அதிகாரிகளின் ஊழலை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக நான் சவுக்கு மீடியா நடத்தி வந்த கட்டடத்தின் உரிமையாளர் மிரட்டப்பட்டு, அந்த கட்டடத்தில் இருந்து என்னை காலி செய்ய வைத்தனர். எனது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4, 5 மாதங்களில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 12 வழக்குகள் சென்னை காவல் எல்லையில் போடப்பட்டன. இரண்டு வழக்குகள் திருச்சியில் போடப்பட்டுள்ளன.எனது வீட்டில் வயதான தாயார் இருந்தபோது சாக்கடை, மலம் ஊற்றப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுவதும் வழக்கை சந்தித்து கொண்டுள்ளேன்.இந்நிலையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையை நியமித்து இரண்டு அதிகாரிகளும் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்தது. இனியும் இதை வெளியிடாமல் இருப்பது எனது உயிருக்கு ஆபத்து என்பதால் இன்று டிஜிபி வெங்கட்ராமனை நேரில் சந்தித்து கொலை முயற்சி குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு டிஜிபியிடம்அளித்தேன்.அதனை முழுமையாக படித்து பார்த்து பரிசீலனை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். சிறையில் தாக்கப்பட்ட போது கூட உயிர் போகும் என நினைக்கவில்லை.மலமும் அள்ளி ஊள்ளப்பட்டபோது கூட ஆபத்து இல்லை ஆனால், இந்த முறை தேர்தலுக்கு முன் என்னை கொலை செய்ய வேண்டும் எனபது தான் இரண்டு அதிகாரிகளின் திட்டம் என்பதால் டிஜிபியிடம் மனு அளித்துள்ளேன்.இந்த அரசில் என்ன செய்தாலும் நாம் தப்பித்து விடலாம் என்ற துணிச்சல் இந்த அதிகாரிகளுக்கு வந்துவிட்ட காரணமாகத் தான், இவர்கள் நினைத்தவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் அடைக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். நீதிமன்றம் பல முறை அரசையும், அவர்களையும் குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தவறு என்று முறை கண்டித்த பிறகும் கூட இப்போது கூட ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, அவரையே குண்டர் சட்டத்தில் கைது செய்த விவகாரத்தை அருண் செய்துள்ளதை பார்த்துள்ளோம். உயிருக்கு ஆபத்து என்பதை டிஜிபி கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Padmasridharan
செப் 19, 2025 05:26

மலமும் அள்ளி "ஊள்ளப்பட்டபோது.. " இதென்ன புது வார்த்தையா அல்லது தமிழ் எழுத்துக்கள் மாறியுள்ள பிழையா அய்யா காக்கி சட்டை போட்ட பலரும் மக்களையே ஏமாற்றி அதிகார பிச்சைக்காரர்களாக மாறி எங்கெல்லாம் பணம் வருகிறதோ அவர்களுக்கு சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். இதற்கு நீதித்துறைதான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.


veera muthu
செப் 18, 2025 10:36

tomorrow you will be victim. think before you comment.


mohana sundaram
செப் 17, 2025 21:19

நீ உயிருடன் இருப்பது பழனியாண்டிக்கு தான் சாதகம் எனவே நீர் போவது தான் நல்லது


SUBBU,MADURAI
செப் 17, 2025 21:16

YouTube ல் ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவனுடன் சேர்ந்து கொண்டு கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன இப்ப நல்லா அனுபவி...


G Mahalingam
செப் 17, 2025 21:05

எடப்பாடி ஆட்சி வந்தால் பிறகு சில போலீஸ் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். நடுநிலை இல்லாமல் திமுக சொன்னால் உடனடியாக கைது.


Palanisamy Sekar
செப் 17, 2025 20:35

அண்ணாமலை என்கிற முன்னாள் நேர்மையான போலீஸ் அதிகாரி அரசியலுக்கு வந்த ஒரே காரணத்துக்காக தொடர்ந்து அவதூறு பரப்பும்போது பாதிக்கப்பட்டவரின் மனம் எந்த அளவுக்கு நொந்துபோயிருக்கும். இதைத்தான் கர்மா என்பார்கள். பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் இருக்க அவதூறு பரப்ப பணத்தை வாங்கிக்கொண்டு சகட்டுமேனிக்கு அண்ணாமலை மீது சேற்றை வாரி இறைக்கும்போது இனித்ததோ? இப்போ பாரு அதே போலீஸ் பதவியில் இருப்பவர் மீது பயம் வந்து புகார் அளிக்கின்றாய். விதி வலியது. இனியாவது நேர்மையாக செயல்படு


pakalavan
செப் 17, 2025 20:31

எடப்பாடியோட கைகூலி


ஆரூர் ரங்
செப் 17, 2025 20:19

டிஜிபி அலுவலக வளாகத்தில் போலீஸ் முன்னிலையில் வன்முறை நடக்கிறது. ஆனால் தாக்கப்பட்ட நபரின் மீது குண்டாஸ். இதற்காகத்தான் 9 பேரை ஒதுக்கி விட்டு ஜூனியர் மேலதிகாரியாக்கப் பட்டாரா? மத்திய அரசு வெளிமாநில காடர் ஐபிஎஸ் அதிகாரியை DGP யாக நியமிக்கவேண்டும்.


Easwar Kamal
செப் 17, 2025 20:13

நீ எடப்பாடியை எல்லாம் நம்பி கடலில் இறங்கலாமா ?


திகழ்ஓவியன்
செப் 17, 2025 20:02

யார்?வாயை வெச்சி பிழைக்கும் நீ தான் யாரையாவது கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி வேலை செய்வ என்ன புதுசா தொடங்கியாச்சா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை