உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை முயற்சி; தடுக்க முயற்சித்த போலீஸ் மீது தாக்குதல்

போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை முயற்சி; தடுக்க முயற்சித்த போலீஸ் மீது தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: தேனி போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷனில் திருட முயன்ற போது, அதனை தடுத்த போலீசார் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஈஸ்வர் நகரில் போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக விற்பனை மற்றும் கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்படுவது வழக்கம். இந்த சூழலில், மாடி வழியாக அந்த ஸ்டேஷனின் உள்ளே மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=stiapk2d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்து வந்துள்ளனர். இதனை அறிந்த கொள்ளையர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அப்போது, அவர்களை போலீஸ்காரர் ஒருவர் மடக்கி பிடிக்க முற்பட்டார். இதனை பார்த்து உஷாரான கொள்ளையர்கள், அந்த போலீசாரை பயங்கரமாக தாக்கி விட்டு, தப்பியோடினர். இதில், போலீஸ்காரர் பலத்த காயமடைந்தனர். ஆனால், அதன் பின்னால் வந்த மற்ற போலீஸார், சாதுர்யமாக செயல்பட்டு, அந்த கொள்ளையர்களை பிடித்தனர். பின்னர், இருவரையும் கைது செய்து அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம், பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டேஷனில் இருக்கும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல இவர்கள் வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Raghavan
ஜன 11, 2025 21:07

கொள்ளையடிக்க ஏற்பாடு பண்ணியதே ஏதோ ஒரு போலீஸ் ஆகத்தான் இருக்க வேண்டும். தீர விஜாரித்தால் உண்மை வெளிவரும்.மாடலுக்கு வேண்டியவனாகக் கூட இருக்கலாம் யார் கண்டது.


அப்பாவி
ஜன 11, 2025 18:02

போலீஸ் மேலே நம்பிக்கை குறைஞ்சிட்டே வருது.


Kasimani Baskaran
ஜன 11, 2025 23:05

போலீஸூக்கெல்லாம் தலைவர் மீது மட்டும் நம்பிக்கை இருக்குதாக்கும்...


Venkateswaran Rajaram
ஜன 11, 2025 18:00

திராவிட மாடல்


Svs Yaadum oore
ஜன 11, 2025 16:46

மாடி வழியாக அந்த ஸ்டேஷனின் உள்ளே மர்ம நபர்கள் புகுந்துள்ளனராம். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனராம் ....அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்துதான் போலீசுக்கே திருடன் நுழைந்தது தெரியுமா ?? .....உள்ளே போதை பொருள் இருப்பது திருடனுக்கு எப்படி தெரியும்?? ....


Kumar Kumzi
ஜன 11, 2025 15:52

போதைபொருள கொள்ளையடிக்க வந்திருந்தால் அநேகமா ஓங்கோல் விடியலின் செல்ல பிள்ளைகள் மூர்க்க காட்டேரிகளாக தான் இருக்க வேண்டும்


Pandi Muni
ஜன 11, 2025 17:38

இதிலென்ன சந்தேகம்


karthikeyan.P
ஜன 11, 2025 15:49

போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து கொள்ளை அடிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது


Kumar Kumzi
ஜன 11, 2025 15:47

ஐயோ பாவம் ஓங்கோல் விடியலின் கொத்தடிமை கூலிப்படைக்கே பாதுகாப்பு இல்லாம போச்சே ஹீஹீஹீ


தமிழ்வேள்
ஜன 11, 2025 14:51

போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து தாக்கும் தைரியம் வருகிறது என்றால் , ஒருக்கால் , ஜாபர் சாதிக் , அமீர் , டிக்கி கும்பலோடு தொடர்புடையவர்கள் , அல்லது சின்ன பெரியவரின் புன்புலம் இருக்கிறதா என்பதையும் போலீஸ் பார்க்கவேண்டும் .....சின்ன பெரியவரை மீறி போலீசும் செயல்பட இயலாது என்பது வெள்ளிடை மலை .


Nandakumar Naidu.
ஜன 11, 2025 14:01

அவர்களின் கை கால்களை உடைக்க வேண்டும். மீண்டும் எழுந்து நடமாடக்கூடது.


Ramesh Sargam
ஜன 11, 2025 14:00

திருப்பதிக்கே லட்டா...?


முக்கிய வீடியோ