உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயணி தவற விட்ட 3 பவுன் தங்கச்சங்கிலி: போலீஸில் ஒப்படைத்தார் ஆட்டோ டிரைவர்

பயணி தவற விட்ட 3 பவுன் தங்கச்சங்கிலி: போலீஸில் ஒப்படைத்தார் ஆட்டோ டிரைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வத்தலக்குண்டு: பயணி தவற விட்ட 3 பவுன் தங்கச்சங்கிலியை, போலீசில் ஒப்படைத்தார் வத்தலக்குண்டு ஆட்டோ டிரைவர் மதன். அவரது நேர்மைக்கு, போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் மதன், 35. ஆட்டோ டிரைவர். வத்தலக்குண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், இன்று ( மார்ச் 07) கட்டகாமன்பட்டியில் இருந்து ரெட்டியப்பட்டிக்கு பயணி ஒருவருடன் சவாரி சென்றார். பயணியை இறக்கி விட்டு திரும்பி வரும்போது, அவரது ஆட்டோவில் தங்கச்சங்கிலி கிடந்தது. தன் ஆட்டோவில் பயணித்தவர் தான் அதை தவற விட்டிருக்க வேண்டும் என்று டிரைவர் மதன் கருதினார். ஆனால், பயணியின் பெயர், முகவரி தெரியாத நிலையில், என்ன செய்வதென்று யோசித்த மதன், தங்கச்சங்கிலியை வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.இதற்கிடையில், நகையை தவற விட்ட விவசாயி கணேசனும் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார். போலீசார் முன்னிலையில், பயணி கணேசனிடம் ஆட்டோ டிரைவர் மதன், 3 பவுன் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தார். நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் மதனை, நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில் குமார், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலைமணி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vns
ஏப் 05, 2025 23:06

நல்ல காலம் உரியவருக்கு அதே சமயத்தில் அதே காவல் நிலையதிற்கு வந்தார். இல்லாவிட்டால் 10 நாள் டாஸ்மாக் செலவு தங்க சங்கலிதான்


Kasimani Baskaran
மார் 08, 2025 07:49

பெரியார் மட்டும் இல்லை என்றால்...


orange தமிழன்
மார் 07, 2025 22:17

தம்பி மதனுக்கு பாராட்டுகள்....


Iniyan
மார் 07, 2025 21:11

பாராட்டுக்கள்.


Royce L
மார் 07, 2025 20:59

90 சதவீதம் கஷ்டப் படுறவன் ஏமாத்த மாட்டான். ஆட்டோ டிரைவர் செய்தது அற்புதம் என்றாலும், போலீஸ் அதை உரியவரிடம் திருப்பி கொடுத்தது பாராட்டுக்குரியது


தேவராஜன்
மார் 07, 2025 20:47

போலீஸ் கிட்டேயா? உரியவரிடம் போய் சேருமா? போலீஸ் மேலே எங்களுக்கு அவ்வளவு (அவ)நம்பிக்கை.


RAJ
மார் 07, 2025 20:21

உங்க மனசு தங்கம் சார். .. மத்திய அரசும், மாநில அரசும் இந்த பெரிய மனிதர்களை கௌரவிக்கவேண்டும்.


Singaravelan
மார் 07, 2025 19:09

ஏழை எளியவர்களிடம் தான் நேர்மை உயிரோடு இருக்கிறது


Ramkumar Ramanathan
மார் 07, 2025 19:07

it is for this kind of people only, still it is raining in this world


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை