உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 130 டன் தரமற்ற விதை நெல் விற்பனைக்கு தடை விதிப்பு

130 டன் தரமற்ற விதை நெல் விற்பனைக்கு தடை விதிப்பு

தாராபுரம்; தாராபுரத்தில், 130 டன் தரமற்ற விதை நெல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகம் முழுதும் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்களுக்கு, 70 சதவீதத்துக்கும் மேல் நெல் விதைகள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உற்பத்தியாகின்றன. இங்கு, 40க்கும் மேற்பட்ட விதை விற்பனை நிறுவனங்களும், 130க்கும் மேற்பட்ட விதை நெல் விற்பனை மையங்களும் உள்ளன. ஆண்டுதோறும், 75,000 டன்னுக்கும் மேற்பட்ட விதை நெல் கையாளப்படுகிறது. உரிய ஆய்வுக்கு பின் சான்றிதழ் வழங்கப்பட்டு, விற்பனைக்கு அனுமதிக்கப்படும். இங்குள்ள விதை நெல் விற்பனை மையங்களில், ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இதில், முளைப்புத்திறன், புறத்துாய்மை, இனத்துாய்மை, விதை நலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில், 130 டன் எடையில், 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான விதை நெல், தரமாக இல்லை என, தெரிய வந்தது. இவற்றை விற்க தடை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை