உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சரவெடி தயாரிக்க பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை; ஆலைகளை மூட டாப்மா சங்கத்தினர் முடிவு

சரவெடி தயாரிக்க பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை; ஆலைகளை மூட டாப்மா சங்கத்தினர் முடிவு

சிவகாசி : சரவெடி தயாரிக்க அனுமதி மறுப்பதாலும், பட்டாசு தயாரிக்கும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை விதித்ததாலும் வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் இன்று முதல் கால வரையின்றி மூடப்பட உள்ளன என தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (டாப்மா) முடிவு செய்துள்ளனர்.பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதால் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடைகோரி 2018 ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம், பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த, சரவெடி தயாரிக்க தடை விதித்தது. மேலும் குறைந்த மாசு உள்ள பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என தெரிவித்தது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்து புதிய பார்முலாவை உருவாக்கி, உற்பத்தியாளர்ளுக்கு பயிற்சி அளிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம்(நீரி), மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) ஆகியவற்றிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது, சரவெடி தயாரிக்கவும் பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தவும் கலெக்டர், டி.ஆர்.ஓ., தனி தாசில்தாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே சரவெடி தயாரிக்காமலும், பேரியம் நைட்ரேட் இன்றி தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த இயலாத காரணத்தாலும் இன்று முதல் கால வரையின்றி தொழிற்சாலைகள் மூடப்படுகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை