உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; போலீசார் விசாரணை

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; போலீசார் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய பிரதேசத்திற்கு கூடைப்பந்து போட்டி விளையாடுவதற்காக சென்று விட்டு திரும்பிய, கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை சென்னையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கோவையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த எலினா லாரேட் ,15, சக பள்ளி மாணவிகளுடன் பங்கேற்றுள்ளார். போட்டி முடிந்து கடந்த 15ம் தேதி ரயில் மூலம் தமிழகம் புறப்பட்டுள்ளார். ரயிலில் வந்த மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற மாணவி எலினா, உடல் பிரச்னை குறித்து அவர்களிடம் கூறியுள்ளார். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே நேற்று எலினா உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் வரும் போது பர்கர், சிக்கன் ரைஸ், பீட்சா உள்ளிட்டவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனைவரும் சாப்பிட்டதாகவும், அதன்பிறகு, எலினாவுக்கு வயிற்றுவலி, வாந்தி போன்ற உபாதைகளால் அவதிப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மாணவியின் மரணத்திற்கு பீட்சா, பர்கர் தான் காரணமா? என்பது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Krishnamurthy Venkatesan
நவ 18, 2024 21:54

குடும்பத்தினருடன் இல்லாமல் சக மாணவ நண்பிகளோடு பயணம் செய்துள்ளார். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இவற்றிற்கு தடை இல்லை. பாவம் அந்த பெண். மனது வலிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள். சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 18, 2024 19:37

வீராங்கனைகள் குழுவே ஆர்டர் செய்ததெனில் மற்றவர்கள் பாதிக்கப்படாதது நிம்மதியளிக்கிறது என்றாலும், மற்றவர்கள் தப்பித்தது எவ்வாறு ??


Bala
நவ 18, 2024 16:45

உணவுக்கும் படம் என்றால் வயிற்ற வலி வயிற்று போக்குக்கு ஏற்பட்டிருக்கும். இது வேறு ஏதோ பிர்சிணை


Srinivasan K
நவ 18, 2024 17:53

outdated non veg food can kill


தமிழ்வேள்
நவ 18, 2024 16:22

ஸ்விக்கி சோமட்டோ செயலியில் பதிவு செய்தால் , ரயில் நிலையத்தில் வண்டியின் இருக்கையிலேயே வந்து கொடுத்துவிட்டு போவார்கள் ..அப்புறம் சாப்பிடுவதற்கென்ன ? எந்த நிலையத்தில் எத்தனை நாளான சிக்கனை கொடுத்தார்களோ எவன் கண்டது ? மாமிச வெறி பிடித்து திரிந்தால் , எதற்கும் தயாராகத்தான் இருக்கவேண்டும் ....


ديفيد رافائيل
நவ 18, 2024 16:18

Train travel பண்றப்ப online food delivery available இருக்கு. இதுல pizza, burger order பண்ணலாம்.


SANKAR
நவ 18, 2024 16:09

apparently other girls. also ate but unaffected.total number of girls not mentioned in the news.it simply says " anaibarum saapittanar".only postmortem report can find out real cause


Duruvesan
நவ 18, 2024 15:27

பிட்சா, பர்கர் எந்த ட்ரைன்ல விக்கறான்? ரயில்வே மினிஸ்டர் ராஜினாமா செய்ய வேண்டும்


rama adhavan
நவ 18, 2024 21:39

அப்போ கள்ள சாராய சாவுகளுக்கு யார் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் சொல்லுங்கள், துணிவிருந்தால்.


வாய்மையே வெல்லும்
நவ 18, 2024 14:20

ஜீவனை கொன்று சாப்பிடும் கலாச்சாரம் என்று ஒழியுமோ அன்றே நன்னாள் . அசைவ பிரியர்கள் தேவையில்லாம கம்புசுற்ற வேண்டாம் என சமூகம் கேட்டுக்கொள்கிறது


theruvasagan
நவ 18, 2024 16:08

நமக்கு ஏனுங்க வம்பு. நம்ம நல்லதை சொல்லப்போனால் நான் எதை தின்ன வேண்டும் என்பது எனது உரிமை. என் நாக்கு என வாய் என் வயிறு என் உடம்பு என்று ஆரம்பிச்சுடுவானுக. எக்கேடாவது கெட்டு போகட்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 18, 2024 19:40

சைவம் உண்போர் அதிகமானால் காய்கறிகள் விற்கும் விலை உங்களுக்கு கட்டுப்படி ஆகாது ....


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 18, 2024 14:20

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் இந்த ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வது முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்களுக்கான உணவு யார் தயாரிக்கிறார்கள் எப்படி தயாரிக்கிறார்கள் எப்படி கொண்டு வருகிறார்கள் என்பது தெரியாது. எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பது தெரியாது.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 18, 2024 14:15

பிராயணங்களின் போது நாக்கை கட்டுபடுத்தி வைத்து கொள்ள வேண்டும். மாமிச உணவு வகைகளை அறவே தவிர்த்து விட வேண்டும். முற்றிலும் மாமிச உணவு வகைகளை வாழ்க்கையில் தவிர்த்தால் இன்னும் நலம். பெற்றோரும் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். பள்ளி மாணவ மாணவிகள் இது போல் பிரயாணம் சென்றால் ஏதாவது ஒரு மாணவ மாணவியின் பெற்றோர் ஆவது உடன் சென்று பார்த்துக்கொள்வது நல்லது. நாவடக்கம் பேச்சிலும் புசிப்பதிலும் கட்டாயம் வேண்டும் எந்த காலத்திலும் எந்த சமயத்திலும்.


SUBRAMANIAN P
நவ 18, 2024 14:36

இதெல்லாம் சொன்னீங்கன்னா கோவம் வந்துரும். நீ யாரு சொல்ல னு கேப்பாங்க..


rama adhavan
நவ 18, 2024 21:47

எண்ணெய் பொருட்களையும் தான் தவிர்க்க வேண்டும். ரயில்வேயில் ஆர்டர் செய்யும் உணவு பொருட்களின் உரையில் தயாரிப்பு தினம், காலாவதி தினம் மற்றும் சேர்க்கைப்பட்ட பொருட்கள், அவை தரமானவை என்ற சான்றிழ் முதலியவை இருக்க வேண்டும்.


புதிய வீடியோ