தேர்வில் முறைகேடு நடந்தால் கல்லுாரிகள் அங்கீகாரம் ரத்து
சென்னை: 'கல்லுாரி வகுப்புகளுக்கு வராத மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கும், பி.எட்., கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.தமிழகத்தில் உள்ள சில ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள், வெளிமாநில மாணவர்களை சேர்க்கின்றன. அந்த மாணவர்கள் வழக்கமான வகுப்புக்கு வராவிட்டாலும், தேர்வெழுத அனுமதிப்பதாக, உள்ளூர் மாணவர்கள் தமிழ்நாடு கல்வியியல் பல்கலையில் புகார் அளித்தனர்.இதையடுத்து, கல்வியல் பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கல்லுாரிகளில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தப்படும். 'வெளிமாநில மாணவர்கள், சேர்க்கை மையம் வாயிலாக தேர்வெழுதாமல், வேறு வழிகளில் தேர்வெழுத அனுமதிப்பது; தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை கண்டறிந்தால், அந்த பி.எட்., கல்லுாரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.