உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கூட்டத்தில் பீர் விருந்து: எஸ்.பி., ஆபீசில் பா.ஜ., மனு

தி.மு.க., கூட்டத்தில் பீர் விருந்து: எஸ்.பி., ஆபீசில் பா.ஜ., மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலுார் தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பீர் பாட்டிலுடன், கறி விருந்து வழங்கிய வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.,வினர் கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

பா.ஜ., கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :

சில தினங்களுக்கு முன், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி திருக்கோவிலுார் வடக்கு, தெற்கு, மேற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடி இளைஞரணி அமைப்பாளர்கள், கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு அக்கட்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலரும் எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு பொது இடத்தில் இரவு 7:00 மணிக்கு, பீர் பாட்டிலுடன் கறி விருந்து வழங்கி உள்ளார்.இது சட்டப்படி குற்றம். இது, இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பாமரன்
மே 01, 2025 10:29

இந்த மாதிரி நடவடிக்கைகள் தானே ஒரு எதிர்கட்சி செய்யனும்...??? இது தெரியாமல் ஒருத்தர் வச்சி காமெடி பண்ணி இங்கிலாந்து ட்ரைனிங் எல்லாம் குடுத்து டைம் அண்ட் மணி வேஸ்ட் பண்ணிட்டீங்க... சும்மா ஃபோட்டோ ஷூட் கம்ப்ளைண்ட் பண்ணிட்டு இருக்காம கேஸ் பதிவு பண்ணலன்னா நீங்களும் ஹாட் ட்ரிங்க்ஸ் வித் அண்டா பிரியாணி பார்ட்டின்னு போட்டியா கிளம்பாமல் கோர்ட்டுக்கு போய் வழக்கு போடுங்க... இதை மாதிரி இருந்தால் எதிர் காலத்தில் தாமரை தமிழகத்தில் மல்லாரலாம்.. புரியுதா


நிக்கோல்தாம்சன்
மே 01, 2025 07:30

விதவைகள் முன்னேற்ற கழகம் விமுக


Kasimani Baskaran
மே 01, 2025 07:01

புகார் கொடுத்தவர்கள் மாடலுக்கு எதிரானவர்கள் என்று வழக்குப்போட்டாலும் போடலாம்..


Svs Yaadum oore
மே 01, 2025 06:17

தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் ....வடக்கன் மாநிலம் போல படிக்காத தற்குறி மாநிலம் கிடையாது ....குளிர்ந்த பீர் பாட்டிலுடன் கறி விருந்து என்பது திராவிட மத சார்பின்மை சமூக நீதி சார்ந்தது ....சமூக நீதியை விடியல் திராவிடனுங்க எப்போதும் எந்த நிலைமையிலும் விட்டு கொடுக்க மாட்டார்கள் ....21ம் பக்கம் படித்து அதன்படி நடப்பவருக்கு மட்டும்தான் இது புரியும் ...


Mani . V
மே 01, 2025 05:54

எஸ்.பி: எனக்கு அழைப்பு விடுக்காமல் சோமபான விருந்தா?


புதிய வீடியோ