உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நம்பினால் நம்புங்க ! மேகதாது அணை தமிழகத்திற்கு தான் லாபமாம்! சொல்கிறார் சிவக்குமார்

நம்பினால் நம்புங்க ! மேகதாது அணை தமிழகத்திற்கு தான் லாபமாம்! சொல்கிறார் சிவக்குமார்

சென்னை: ''மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக பயன்'' என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை சேத்துப்பட்டில் மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கி வரும் பயோ - சி.என்.ஜி., மையத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று பார்வையிட்டார். அப்போது எரிவாயு உற்பத்தி முறையை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக பயன். போதியளவில் மழை பெய்து, உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால், கர்நாடக நீர் திறப்பு குறித்து பேச வேண்டியதில்லை. 2 மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்,'' என்றார்.

உதயநிதியுடன் சந்திப்பு

மாலையில் அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து பேசினார் சிவக்குமார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கூட்டணி கட்சி என்பதால் உதயநிதியை சந்தித்தேன். அவருடனான சந்திப்பு நட்புரீதியானது. மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை மதிப்போம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

jeyabalan
செப் 05, 2024 07:52

தமிழில் ஒன்று சொல்வார்கள் "குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு" நான் திரு சிவக்குமார் அவர்களை பற்றி கூறவில்லை.


Nava
செப் 03, 2024 19:59

இவரு பெரிய அதிமேதாவி என்ற நினைப்பிலேயே பேசிக்கொண்டு இருக்கிறார்.இவர்களின் உள்நோக்கம் என்னவென்று தமிழர்களுக்கும் தெரியும் என்பதை மறந்து விட வேண்டாம்.


Muthu Kumaran
செப் 03, 2024 17:13

மணல் திருடி விக்கலாம் , விவசாயம் இல்லாமல் போகும் விவசாய நிலங்கள் பிளாட் போட்டு விக்கலாம் கார்போ ஹைட்ரடே திட்டம் அமல் படுத்தலாம் , சோற்றுக்கு ஆந்திர கர்நாடக மேற்கு வங்கம் கையேந்திடலாம்


ஆரூர் ரங்
செப் 03, 2024 17:12

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின்படி ஆண்டுக்கு 177 TMC நீரைக் கொடுத்தாகவேண்டும். அது நிச்சயம். ஆனால் இங்கு கூடுதல் அணைகள் எதுவும் கட்ட முடியாத சூழ்நிலையில் அவர்கள் கட்டுவதை ஏன் நாம் தடுக்க வேண்டும் ? காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியினருகில் கர்நாடக அரசு ஏராளமான புதிய குளம் , ஏரிகளை உருவாக்கியது அங்கு சேமித்துள்ள நீர் அவர்களது அணைகளின் கொள்ளளவு கணக்கில் சேராது . அதிலிருந்து அவர்கள் நமக்கு கொடுக்க வேண்டிய கட்டாயமுமில்லை. என்ன செய்வீர்கள்? கொஞ்சம் பிராக்டிக்லாக யோசியுங்கள்.


Rajarajan
செப் 03, 2024 15:46

நம்பிட்டோம். ஹையா கிச்சு கிச்சு கிச்சு கிச்சு. நல்லா சிரிப்பு வருது. இந்த வருடத்திற்கான மிக சிறந்த நகைச்சுவை.


kulandai kannan
செப் 03, 2024 14:28

தமிழகக் கட்சிகளெல்லாம் எதிர்ப்பதால் அத்திட்டத்தால் நன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு என்றுதான் தோன்றுகிறது.


Jysenn
செப் 03, 2024 14:17

Karnataka diravida komaaligal model.


Chinnamanidhanabal
செப் 03, 2024 13:26

கர்நாடக காங்கிரஸ் கட்சி அரசுக்கு, தமிழர்கள் மீது என்னே ஓர் கரிசனம்!. வெட்கக்கேடு!


KRISHNAN R
செப் 03, 2024 13:13

ஆமாம் நூட்று பதினோனு


சோழநாடன்
செப் 03, 2024 13:06

தமிழகம் நன்மை பெறவே காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுகின்றது என்பது கேட்க நன்றாகவே உள்ளது. கொடுக்கவேண்டிய தண்ணீரைக் கொடுக்க வக்கில்லை கர்நாடக அரசுக்கு... இதுல தமிழ்நாட்டு நன்மைக்கு அணை கட்டறங்களா.... தேசியம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியும், மோடியின் பாஜக கட்சி அரசுகளும் தமிழன் காதில் நிறைய பூ சுற்றி வைத்துவிட்டன. இதுக்குமேல காதுல பூ சுத்தறத தாங்கமுடியாது சாமி.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை