உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெங்களூரு குண்டுவெடிப்பு: மத்திய அமைச்சருக்கு ஐகோர்ட் கண்டனம்

பெங்களூரு குண்டுவெடிப்பு: மத்திய அமைச்சருக்கு ஐகோர்ட் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' ஓட்டலில், கடந்த மார்ச்சில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, 'தமிழகத்தில் பயிற்சி பெற்று வருவோர், இங்கு வெடிகுண்டுகள் வைக்கின்றனர்' என, பேசினார்.இதற்கு அவருக்கு எதிராக, மதுரையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின்படி, வன்முறையை துாண்டுதல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ், மதுரை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபா கரண்ட்லாஜே மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''அரசியல் உள்நோக்குடன் வழக்கு பதியப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.போலீசார் சார்பில், அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, ''மனுதாரர், உள்நோக்குடன் பொது வெளியில் பேசிய வீடியோக்கள் உள்ளன. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதங்களை முன்வைக்க இருப்பதால், வரும் 12ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.அப்போது, 'விசாரணை தள்ளிவைப்பதாக இருந்தால், மனுதாரருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்' என, மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.அதை ஏற்க மறுத்து, நீதிபதி கூறியதாவது: ராமேஸ்வரம் ஓட்டலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வைத்ததாக கூறினாரா, இல்லையா? அவ்வாறு மனுதாரர் கூறியிருந்தால், அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.சென்னையில் என்.ஐ.ஏ., விசாரணை அமைப்பு சோதனை நடத்தும் முன், இவ்விவகாரம் தொடர்பாக கருத்து கூறியுள்ளார். அப்படியானால், மனுதாரருக்கு சம்பவம் தொடர்பான உண்மை தகவல் தெரிந்துள்ளது என்று தானே அர்த்தம்? அதாவது, பயிற்சி பெற்ற நபர்கள் யார், அவர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள் யார், அவர்கள் என்ன செய்தனர்என்பது தெரியும்.சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்திருந்தால், முதலில் அதை காவல் துறையிடம் தெரிவித்திருக்க வேண்டும், பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், அமைச்சர் அதைச் செய்யவில்லை. இவ்வாறு கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Velan Iyengaar
ஜூலை 11, 2024 16:21

தமிழ் உணர்வோ இல்லை தமிழக பற்றோ இருக்காது


Velan Iyengaar
ஜூலை 11, 2024 16:17

எடியூரப்பா இப்போகூட ரொம்போ இனிக்கிறாரா ?? இல்லை துவர்ப்பா இருக்கிறாரா ???


Sridhar
ஜூலை 11, 2024 12:54

அமைச்சர் அரசு அமைப்புகளுக்கு ஏற்கனவே தகவல் கொடுத்தாரா இல்லையான்னு ஜட்ஜுக்கு எப்படி தெரியும்? அவர் அறிக்கை விட்டபிறகு வந்த செய்திகளின் மூலம் அவர் சொன்னது உண்மைதான்னு நிரூபணம் ஆயிடுச்சே அப்புறம் என்ன வழக்கு வேண்டிகெடக்கு?


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 11, 2024 12:23

தீவிரவாதிகளின் சொர்க்கபூமி ..... காஷ்மீருக்கு அடுத்தபடியாக ......


venugopal s
ஜூலை 11, 2024 10:39

இவர் பாஜக அமைச்சர் என்ற ஒரே காரணத்துக்காக இவர் பேச்சை ஆதரிக்கும் சங்கிகளை தமிழகத்தை விட்டு விரட்டி அடிக்க வேண்டும்!


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 11, 2024 12:18

அரசு விழாவில் சீனக்கோடி பிரசுரித்த தேசவிரோதிகள் எப்போது வெளியேறுவார்கள் ????


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 11, 2024 12:40

வேணு ... டீ இன்னும் வரல .... அதைவிட முக்கியம் காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கும் வரல ..... புலிகேசி மன்னர் கர்நாடகா மீது பாய்வாரா ????


Velan Iyengaar
ஜூலை 11, 2024 09:32

இந்த பொம்பள எல்லா தமிழர்கள் பற்றி பேசி இருக்கு என்பதை மனதில் வைய்யுங்கள் ...


Barakat Ali
ஜூலை 11, 2024 10:09

ராகுல் ஹிந்துக்களை பழித்துப்பேசியது மதவெறியைத்தூண்டி குளிர்காய .....


ஆரூர் ரங்
ஜூலை 11, 2024 10:36

பார்லிமெண்டில் எல்லா ஹிந்துக்களையும் தாழ்த்தப் பேசியது உங்க INDI தலீவர் பப்பு.


Duruvesan
ஜூலை 11, 2024 11:46

உருது பேசும் மூரக்ஸ் உனக்கு அப்பா வெச்ச பெயரை கூட சொல்ல கூச்சம் ,கேவலம்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 11, 2024 12:38

அரசியல் சட்டப்படி பதவியேற்ற அமைச்சரோ, மந்திரியோ சீன வழிபாடு செய்வதை கேவலமாக நினைக்கவேண்டாமா ????


Sridhar
ஜூலை 11, 2024 13:11

உன்னைப்போன்ற ஆட்கள் இருக்கறவரை, அப்படி பேசியிருந்தாகூட தப்பில்ல.


Barakat Ali
ஜூலை 11, 2024 09:30

மேற்கு வங்கம், உ பி போன்ற மாநிலங்களில் தீவிரவாத செயல்களை செய்துவிட்டு தமிழகம் வந்து பதுங்குகிறார்கள் ..... கரந்த்லாஜே சொன்ன கருத்து முற்றிலும் புறக்கணிக்கத் தக்கது அல்ல ..... சில வருடங்களுக்கு முன்பு மெஹபூபா முஃப்டியின் மகள் சென்னையில் தங்கியிருந்தார் ..... எங்கே யார் வீட்டில் ???? இதைப்பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை ....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 11, 2024 12:21

இந்தம்மா குறிப்பிட்ட சம்பவம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே யில் நடந்த குண்டு வெடிப்பு .... அதில் குண்டுவைத்தவனும் தங்கியது சென்னையில்தான் ....


Velan Iyengaar
ஜூலை 11, 2024 09:30

பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு இது விஷப்பாம்பு


Duruvesan
ஜூலை 11, 2024 09:01

ஹிந்துக்கள் மொத்தம் தீவிரவாதின்னு ஒருத்தர் சபையில் கூறினார், அப்போ சார் தூங்கிட்டாரு


VENKATASUBRAMANIAN
ஜூலை 11, 2024 08:26

மக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் நம்பிக்கை இழந்து வருகிறது.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ