உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜனநாயகத்திற்கு துரோகம்: சீமான்

ஜனநாயகத்திற்கு துரோகம்: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'எதிர்க்கட்சியாக இருந்தபோது, மக்கள் நடத்திய போராட்டங்களை தன்வயப்படுத்திய தி.மு.க., தற்போது எதிர்க்கட்சிகளை போராட விடாமல் தடுத்து வருகிறது' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த தடை விதித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் தி.மு.க.,வின் கொடுங்கோல் போக்கு கண்டனத்திற்குரியது.நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, அறவழியில் போராடுவதற்கே அனுமதி மறுப்பதும், துண்டறிக்கை கொடுப்போரைக்கூட கைது செய்து ஒடுக்குவதுமான இச்செயல்பாடுகள் யாவும் பாசிசப் போக்காகும்.கடந்த காலத்தில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய அறப்போராட்டங்களை எல்லாம் தன்வயப்படுத்தினர். அவற்றை வைத்து அரசியல் ஆதாயம் அடைந்து, ஓட்டு அரசியலில் தி.மு.க., லாபம் பெற்றது.ஆளுங்கட்சியானதும், எதிர்க்கட்சிகளை முழுதும் போராட விடாமல் முடக்குவதும், அரசே வன்முறைகளை ஏவி விடுவதும் ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

S.kausalya
ஜன 04, 2025 10:01

ஐயா நீங்க ஆட்சிக்கு வந்தாலும் இதே போல தான் நடப்பீங்க. இப்பவே எதிர் பேச்சு கூடாது என்று நினைப்பவர் நீங்கள்.


Duruvesan
ஜன 04, 2025 08:14

பாஸ் திராவிடர்கள் ஓட்டு என்னைக்குமே தீயமுகவுக்கு தான், என்ன தான் நீங்க கூவினாலும், குவாட்டர் 2000 ஊவா பிரியாணி குடுக்கும் விடியலுக்கு தான் அடிமைகள் ஓட்டு போடும்


N.Purushothaman
ஜன 04, 2025 08:05

அதுக்கு பேருதான் திராவிட மாடல் ....


Bala
ஜன 04, 2025 08:01

மதமாற்றும் சக்திகள் மற்றும் இலவசங்கள் எங்க கிட்ட இருக்கு. என்ன கூவினாலும் இதை வைத்து ஜெயித்து விடுவோம்.


Haja Kuthubdeen
ஜன 04, 2025 08:50

சும்மா இதையே சொல்லாதீங்க...திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் வைகோ மற்ற எவனாவது இதைப்பற்றி கேள்வி கேட்டானா??திருமா மட்டும் பேருக்கு ஒரு அறிக்கை...


Kanns
ஜன 04, 2025 07:44

Overthrow aAl Divisive-Destructive-MegaLoot Ruling-Alliance Parties esp DMK VCK PMK etc being also Goonda& Casteist Parties


பேசும் தமிழன்
ஜன 04, 2025 07:32

தமிழர்கள் வேறு திராவிடர்கள் வேறு என்பதை தமிழர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்... சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் வந்து விட்டது.


ஆரூர் ரங்
ஜன 04, 2025 09:31

இரண்டுமே பொய். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எப்போதோ உணர்ந்து விட்டனர்.


Kasimani Baskaran
ஜன 04, 2025 07:16

திராவிடர்களிடம் பெட்டி வாங்கி கட்சிநடத்தும் நிலையில் நாம் தமிழர்கள்... நித்தம் நித்தம் லட்சுமிகளுக்கு பயந்து அரசியல் செய்ய வேண்டிய நிலை... மிக மிக பரிதாபமானது.


raja
ஜன 04, 2025 06:07

திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்தை அடித்து விரட்டும் நேரம் வந்துவிட்டது...


Seekayyes
ஜன 04, 2025 05:29

டுமீலர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். பிச்ச காசை வாங்கிவிட்டு ஓட்டு போட்டவர்களுக்கு வேறு என்ன கிடைக்கும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை