மேலும் செய்திகள்
அரசு பஸ் வாடகை உயர்வு
13-Nov-2026
கோவை: பாரதியார் பல்கலை விடுதிகளில் அறை வாடகை, பராமரிப்புக்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக மாணவர்கள் தரப்பில் அதிருப்தி எழுந்துள்ளது. பல்கலை வளாகத்தில், 13 விடுதிகளில், சுமார், 2800 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில், 2026–27 ம் கல்வியாண்டில் சேர்ந்த, மாணவர்களுக்கு விடுதி சார்ந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விடுதி அறைக்கான மாத வாடகை 210ல் இருந்து 500 ரூபாய் ஆக, 2.38 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. முன்வைப்புத் தொகை 8,710ல் இருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு பராமரிப்பு கட்டணம் 200ல் இருந்து 1,000 ரூபாயாக ஆக, ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் 10ல் இருந்து 100 ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலை சிண்டிகேட் தரப்பில் கடந்த ஜூலை மாதம் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டது. விடுதிகளில் பழுதுபார்ப்புப் பணிகள் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாக தயாரிக்கவும், கட்டணங்கள் உயர்த்தியதாக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பதிவாளர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ராஜவேல் கூறுகையில், ‘‘கடந்த 2007 ம் ஆண்டு விடுதி கட்டணம் இறுதியாக உயர்த்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் உயர்த்தியுள்ளோம். விலைவாசி, கட்டட பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ள சூழலிலும் பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. மாநில பிற பல்கலைகளின் கட்டணங்களை ஒப்பிட்டு மாணவர்களுக்கும் பெரிதாக பாதிப்பு இல்லாத வகையில் கடந்த ஜூலை மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், மாணவர்களின் கோரிக்கையை கேட்டு உரிய குழு அமைத்து மீண்டும் இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும்,’’ என்றார்.
13-Nov-2026