உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதி

 மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதி

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, 84. இவரது மகன் மனோஜ்குமார், 48, கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் இறந்தார். மகனை இழந்த சோகத்தில், பாரதிராஜா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். குடும்பத்தார் வற்புறுத்தியதால், மலேஷியாவில் உள்ள மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்தார். சென்னை திரும்பிய அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சென்னை தி.நகரில் வசிக்கும் பாரதிராஜா, தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதால், அதை சரி செய்ய டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை