மேலும் செய்திகள்
த.வெ.க., மாநாடு தள்ளிப்போனது ஏன்?
21-Sep-2024
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிக்காக நாளை 4 ம் தேதி வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடக்க உள்ளது.தமிழக வெற்றிக் கழக மாநாடு அக்., 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது.இதற்கான பணி, நாளை 4ம் தேதி வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறையில் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்,மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்து மாநாட்டு பணியை துவக்க உள்ளனர்இதற்காக மாநாட்டிற்கு இடம் வழங்கிய நில உரிமையாளர்கள் 25 பேரை நேற்று இரவு 7.15 மணிக்கு மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
21-Sep-2024