உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டுப்பாளையம்: கோவை, திருப்பூருக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை அமைந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hj6o0qx9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணை நிரம்பியதாக அறிவிக்கப்படுவது வழக்கம். அதன் பின் அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும் நான்கு மதகுகள் மற்றும் பவானி ஆற்றில் திறந்து விடுவர்.நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நேற்று இரவு பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 82.25 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. இரவு, 11:00 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு 2:30 மணிக்கு அணையின் முழு கொள்ளளவான, 97 அடியை எட்டி அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும் அப்படியே நான்கு மதங்கள் வழியாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து நான்கு மதகுகள் வழியாக தலா, 2 ஆயிரம் கன அடியும், மின்சாரம் உற்பத்தி செய்ய, 6000 கன அடியும் தண்ணீரும் என மொத்தம் 14 ஆயிரத்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

வல்லவன்
ஜூன் 16, 2025 15:06

இந்த அனையில் 50 அடிக்கு மேல் சேர் மற்றம் மண் தேங்கி உள்ளது. சிறிய மழைக்கே நிறைந்துவிடும்.


lana
ஜூன் 16, 2025 12:04

இந்த தண்ணீரை சேர்த்து வைக்க மனம் இல்லை பணம் இல்லை. இலவச திட்டங்கள் க்கு விளம்பரங்கள் செய்ய பணம் இருக்கிறது. கர்மவீரர் காமராசர் தவிர மற்ற அனைவரும் தொலை நோக்கி திட்டங்கள் இல்லை வெறும் கொள்ளை திட்டங்கள் மட்டுமே


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 16, 2025 10:16

பில்லூர் அணை நிரம்பினாலும் இந்த அணையின் மூலம் குடிநீர் பெறும் கிராமங்களுக்கு அதாவது அத்திகடவு குடிநீர் பெறும் கிராம பகுதிகளுக்கு பதினைந்து நாட்களுக்குளுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டுமே கால் இஞ்ச் குழாயில் தண்ணீர் விடுகிறார்கள்.


Manaimaran
ஜூன் 16, 2025 09:30

இந்த நீர் . எடப்பாடியின் சாதனை, திட்டத்தில் பயன்படுமா?


sundarsvpr
ஜூன் 16, 2025 08:43

மழை நீர் கடலில் கலப்பதால் நீர் வீணாகிறது என்று கருதமுடியாது. கடலில் கலப்பது இயற்கை கடல் நீர் தான் சூரிய வெப்பத்தால் காலத்தில் மழையாக பெய்கிறது. கடலில் கலப்பதற்குத்தான் ஆண்டவன் மழை கொடுக்கிறானா என்பதுதான் கேள்வி. மாற்று வழி ஏன் இல்லை?


R Viswanathan
ஜூன் 16, 2025 12:04

we should try our best to save water.


புதிய வீடியோ