உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆந்திராவில் பறவை காய்ச்சல் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை

ஆந்திராவில் பறவை காய்ச்சல் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை

வேலுார்: ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவுவதால், தமிழக - ஆந்திர எல்லையிலுள்ள கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்களுக்கு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, ராஜமுந்திரி மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அங்கு, 10,000க்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகி உள்ளன.இந்நிலையில், தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க, தமிழகம் - ஆந்திர எல்லையான வேலுார் மாவட்டம், கிறிஸ்டியான்பேட்டை, சைனாகுண்டா, பரதராமி ஆகிய மூன்று சோதனைச்சாவடி வழியாக ஆந்திராவிலிருந்து கோழிகள், முட்டைகள் ஏற்றி வரும் வாகனங்களை, வேலுார் மண்டல கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தடுத்து, கிருமி நாசினி தெளித்து, கோழிகளுக்கு பறவை காய்ச்சல் குறித்த சோதனை செய்த பின்னர், அனுமதிக்கின்றனர்.அதே போல, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி