உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., -- பா.ம.க., சந்தர்ப்பவாத கூட்டணி: முத்தரசன் சாடல்

பா.ஜ., -- பா.ம.க., சந்தர்ப்பவாத கூட்டணி: முத்தரசன் சாடல்

காரைக்குடி:''பா.ஜ., - பா.ம.க., கூட்டணி சந்தர்ப்பவாதமானது,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய கம்யூ., மாநில பொது செயலாளர் முத்தரசன் சாடினார்.அவர் கூறியதாவது:பா.ஜ., கொடுத்த வாக்குறுதிகள் கடந்த பத்தாண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை. தற்போது மீண்டும் பிரசாரத்தில் மோடி உத்திரவாதம் என கூறுகிறார். இது மோடி உத்தரவாதம் இல்லை. உபத்திரவாதம். 2019 தேர்தலில் தி.மு.க., கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியில் நின்று போட்டியிட்டன. இன்று அவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக சென்ற நிலையில் தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.தமிழிசை கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்கு வருவது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக போகிறது. அ.தி.மு.க., அத்தனை கதவுகளையும் திறந்து வைத்தும் யாரும் கூட்டணிக்கு வரவில்லை. பா.ஜ.,வை விட்டு அ.தி.மு.க., விலகினாலும் கடந்த ஆட்சியின் போது மக்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணம் தமிழர்கள் தான் என்று மத்திய அமைச்சர் ேஷாபா கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ