உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வில் சேர்ந்த போலீசார் சஸ்பெண்ட்

பா.ஜ.,வில் சேர்ந்த போலீசார் சஸ்பெண்ட்

நாகப்பட்டினம்:நாகை மாவட்டத்தில், கடந்த 27ம் தேதி, 'என் மண், என் மக்கள்' யாத்திரை மேற்கொண்ட பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாகப்பட்டினம் வந்தார். அவருடைய வருகையை ஒட்டி பா.ஜ., சார்பில், பா.ஜ.,வில் இணைவதற்காக மொபைல் போனில், 'மிஸ்டு கால்' கொடுத்து உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ.,க்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் ஆகியோர், போலீஸ் சீருடையுடன் பா.ஜ.,வில் உறுப்பினராக இணைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இது குறித்து விசாரணை நடத்திய எஸ்.பி., ஹர்ஷ் சிங், இருவரையும், முதற்கட்டமாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.இதையடுத்து, பா.ஜ.,வில் உறுப்பினராக சேர்ந்த எஸ்.எஸ்.ஐ.,க்கள் இருவரையும், நேற்று சஸ்பெண்ட் செய்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி., ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி