உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30 தொகுதிகளில் பா.ஜ., போட்டி இரட்டை இலக்க வெற்றிக்கு இலக்கு

30 தொகுதிகளில் பா.ஜ., போட்டி இரட்டை இலக்க வெற்றிக்கு இலக்கு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., 25 - 30 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், சென்னை கமலாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கான மாநில அமைப்பு பயிற்சி முகாமில் பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் பங்கேற்று, பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

பின், முக்கிய நிர்வாகிகளிடம் அவர் பேசியுள்ளதாவது:

பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் பணியை மேலிடம் மேற்கொண்டு வருவதால், கட்சியினர் இதில் கவனம் செலுத்த வேண்டாம். கட்சியினர் தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களை சந்திக்க வேண்டும்; அவர்கள் குறைகளை கேட்டு, அதை களைய முயற்சி எடுக்க வேண்டும். சட்டசபை தேர்தலில், பா.ஜ., இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க.,வினரிடம் எவ்வித நெருடலும் இல்லாமல் உறவை தொடர வேண்டும். அப்போது தான், அ.தி.மு.க.,வினரும் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவர். இரு கட்சியினரும், தங்கள் பகுதியில் நடக்கும் குடும்ப நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில் இணைந்து பங்கேற்க வேண்டும். இவ்வாறு சந்தோஷ் பேசியுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

தாமரை மலர்கிறது
ஆக 13, 2025 00:34

இரண்டாவது பெரிய கட்சிக்கு வெறும் முப்பது தொகுதிகளா? குறைந்தது என்பது தொகுதிகள் பிஜேபிக்கு கொடுக்கப்பட வேண்டும். மூணு கோடி வடஇந்தியர்கள் ஓட்டுபோட இருக்கிறார்கள். அதிமுகவை விட அதிக தொகுதிகளில் பிஜேபி ஜெயிக்க வாய்ப்புள்ளது.


sankar
ஆக 12, 2025 23:30

ரெட்டை இலக்குதான் உறுதி என்றால் 10 தொகுதி போதும் என்று சொல்லிவிடலாமே . நைனார் தலைமையில் அமிட்சா வழிகாட்டுதலில் பிஜேபி திருவோடு ஏந்தி பிட்சை கேட்கிறது .


vadivelu
ஆக 13, 2025 06:39

இன்றைக்கு எந்த கட்சி தனித்து நிற்கிறதோ அது மட்டுமே திருவோடு ஏந்தாமல் வருகிறது.


Gnana Subramani
ஆக 12, 2025 22:13

அண்ணாமலை பேசின பேச்சுக்கு பிஜேபி 204 இடத்தில் போட்டியிட்டு 30 இடங்களை அதிமுகவிற்கு கொடுக்கலாம்


vadivelu
ஆக 13, 2025 06:40

கொடுக்கலாம், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. 2036 ல் நிப்பாங்க


Indian
ஆக 12, 2025 21:59

சார் நீங்க ஜனாதிபதிக்கு எழுதுங்க அப்பத்தான் சரியா வரும்


SP
ஆக 12, 2025 21:06

திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சொல்கின்றார்களே தவிர அவர்களின் ஊழல் குற்றச்சாட்டின் மேல் எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுப்பதில்லை. இந்த விஷயத்தில் இவ்வளவு நிதானமாக மத்திய பாஜக செயல்படுவது வருத்தத்திற்குரியது


Selvaraj
ஆக 12, 2025 21:06

நல்ல செய்தி தானே. நைனார் தலைமையில் வெற்றி சாத்தியமே. வாழ்த்துக்கள்


Gajageswari
ஆக 12, 2025 20:14

இவர்களை நம்பி யார் ஒட்டு போடுவார்கள்


Gnana Subramani
ஆக 12, 2025 17:03

அண்மையில் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலிலேயே 60 ஆட்கள் இருக்கிறார்களே. 30 சீட் வாங்கினால் எப்படி. தமிழ் நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன


Kannan
ஆக 12, 2025 15:08

அட மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் மரியாதைக்காக அதிமுகவுடன் எம்ஜியார் ஃபார்முலா ஒப்பந்தமாவது போட்டிருக்கலாம்.


தேச நேசன்
ஆக 12, 2025 15:07

இங்கு பிஜேபி க்கு எதிராக கருத்து போட்டவர்கள் எல்லாம் தங்கள் வாரிசுகளுக்கு எப்படிப்பட்ட தமிழகத்தை விட்டு செல்ல போகிறோம் என்று யோசிக்கவில்லை. இந்த பாரத தேசத்தில் மக்களுக்காக உள்ள ஒரே கட்சி பிஜேபி தான். விரைவில் தாமரை மலரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை