உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாத்தனூர் அணை சரியாக தூர் வாராததே பாதிப்புக்கு காரணம்! அண்ணாமலை குற்றச்சாட்டு

சாத்தனூர் அணை சரியாக தூர் வாராததே பாதிப்புக்கு காரணம்! அண்ணாமலை குற்றச்சாட்டு

விழுப்புரம்: சாத்தனூர் அணையை சரியாக தூர் வாராததே மழை, வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பெஞ்சல் புயலால் உப்பளத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, உப்பளத் தொழிலாளர்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ukj8imci&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது; வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை மையம் கூறி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆறுகளை முறையாக தூர் வாராததே வெள்ள பாதிப்புக்கு காரணம். நாங்கள் இங்கு வந்ததன் நோக்கம், நிலைமை எப்படி உள்ளது என்பதை தெரிவிப்பது தான். மத்திய அரசிடம் பணம் கேட்டோம், தர வில்லை என்று பழிபோடுவார்கள். பொதுவாகவே, இதுபோன்ற தருணங்களில் ஒருவாரத்தில் மத்தியக் குழுவினர் வருவார்கள். இது ஒரு நடைமுறைதான். அவர்கள் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடுவார்கள். அதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு தொகை தரலாம். நிச்சயம் மத்திய அரசின் தரப்பில் இருந்து இழப்பீடு வழங்கப்படும். சாத்தனூர் அணை திறப்பின் போது, மாநில அரசு 5 முறை அலர்ட் கொடுத்து உள்ளோம் என்று கூறுகிறது. 1 மணிநேரம் முன்பு சொல்லி விட்டு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். மக்கள் எப்படி வெளியேற முடியும். 38 கிராமங்கள் மூழ்கிவிட்டன. சாத்தனூர் அணையை சரியாக தூர் வாராததே காரணம். அரசு இயந்திரம், குறிப்பாக மாநில அரசு சரியாக செயல்படவில்லை. இந்த எச்சரிக்கை என்பது துறைகளுக்குள்ளாக மட்டுமே தெரியபடுத்தி உள்ளனர். அதிகாலை 2 மணிக்கு அறிவிப்பு தந்ததால் மக்கள் வெளியேற முடியவில்லை. செந்தில் பாலாஜி பெயிலில் வந்த பின்னர் அமைச்சராக பொறுப்பேற்றதை சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டி உள்ளது. அவர்கள் எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் தப்பித்து விடலாம். மக்கள் மன்றத்தில் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Mariadoss E
டிச 05, 2024 20:34

சும்மா குறை சொல்லி கிட்டு திரியாமல் பாரபட்சம் கட்டும் மத்திய அரசிடம் சொல்லி நிதி ஒதுக்க சொல்லலாம்.....


MADHAVAN
டிச 04, 2024 13:10

ஒரு கூடை நிறையா குப்பையை கீழ போட்டு அதை கூட்டினேனே அப்படியா ?


Ramesh Sundram
டிச 04, 2024 09:20

விழுப்புரம் முழுவதும் வெள்ள காடு ஆனால் மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் இல்லை இது நமது தமிழகத்தின் சாப கேடு


ராமகிருஷ்ணன்
டிச 04, 2024 06:48

தூர்வாரியாகி விட்டது என்று கணக்கு காட்டி பணத்தை சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு இதான் விடியல் ஆட்சியின் நடைமுறை. அண்ணாமலை அந்த கணக்குகளை வெளியே எடுங்கள்.


ராமகிருஷ்ணன்
டிச 04, 2024 06:32

தூர்வாரியாகி விட்டது என்று கணக்கு காட்டி பணத்தை சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு இதான் விடியல் ஆட்சியின் நடைமுறை. அண்ணாமலை அந்த கணக்குகளை வெளியே எடுங்கள்.


Sampath Kumar
டிச 03, 2024 19:24

ஆட்டுக்குட்டி நீயே போய் தூருவாரு பார்க்கலாம் ...


Nagraj Muthiah
டிச 03, 2024 20:34

2026 வரட்டும் மொத்தமா தூர்வாரிடுவார்கள்


hari
டிச 03, 2024 20:44

அங்கே சேறு அடிச்சாங்க.....அங்கே போய் முட்டு குடு


VENKATASUBRAMANIAN
டிச 03, 2024 18:57

மழை வரும் என்று முன்பே தெரியுமே என்ன நடவடிக்கை எடுத்தார்கள். சும்மா தண்டோரா போட்டால் மட்டும் போதுமா. அரசு அதிகாரிகள் அதை உறுதி செய்ய வேண்டாமா அதை திமுக அமைச்சர்கள் உறுதி செய்யவேண்டும் அல்லவா. அரசு சம்பளம் வாங்குகிறார்களே .அதிகாரிகளை மட்டுமே குறை சொல்லி தப்பிக்க கூடாது


MADHAVAN
டிச 03, 2024 17:13

அரை அடி தன்னீரில் அண்ணாமலை இப்போது படகு சவாரி செய்யபோறாரு, எல்லோரும் ஜோரா கையதட்டுங்க,


Kumar Kumzi
டிச 03, 2024 18:03

கொத்தடிமையே ஓங்கோல் வயல்வெளியில் கார்பெட் போட்டு நடந்தானே அதையும் சொல்லு


hari
டிச 03, 2024 16:28

பொன்முடி மேல சேறு.. ...அந்த நியூஸ் ல். ஒரு முட்டு கூட காணோமே


KumaR
டிச 03, 2024 15:24

வயல்ல டைல்ஸ் போட்டு ஒரு துண்டுசீட்டு போகும் பொது சிரிப்பு வரலையா..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை