உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றணும்: அண்ணாமலை

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றணும்: அண்ணாமலை

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தி.மு.க., உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=prrta2s5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தொடர்ச்சியாக மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் தி.மு.க., விளம்பரத்துக்காக, கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, தொழில் துறையினரையும் ஏமாற்றி வருகிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் மட்டும் 12kw மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் சுமார் 52,367 சிறு தொழிற்சாலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க., அரசின் மின் கட்டண உயர்வால், இந்தச் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே, இந்தச் சிறு தொழில்களுக்கான மின்சார இணைப்பு வகையை III (B) ல் இருந்து III A (1) ஆக மாற்ற வேண்டும் என்று, தொழில் நிறுவனக் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதனால், மின் கட்டணம், ஒரு யூனிட்டுக்கு ரூ.9.60 ல் இருந்து ரூ.4.65 ஆகக் குறையும். தி.மு.க., அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்து, பல ஆர்ப்பாட்டங்களை நடத்திய பிறகு, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று, 12 kw மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் நிறுவனங்களை, III-B வகையிலிருந்து, III-A(1) வகைக்கு மாற்றுவது குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை பெற்ற பின் பரிசீலிக்கப்படும் என்று, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை அடுத்து, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனுப்பிய கடிதத்தில், 12 kw மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கட்டண வகையை, III-B வகையிலிருந்து, III-A(1) வகைக்கு மாற்றலாம் என்றும், இந்த மாற்றம், இனி வரும் காலங்களுக்கான மின்கட்டணக் கணக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த நிறுவனங்கள், 12 kw மின் சுமைக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது, தானியங்கி முறையில், அவர்களுக்கான மின்கட்டணம் III-B பிரிவுக்கு மாற்றப்படும் என்றும், கூறப்பட்டிருந்தது.ஆனால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், இந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம், உயர்த்தப்பட்ட மின் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இது குறித்து, தொழில் அமைப்புகள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் வகையில், கடந்த ஜனவரி 23, 2025 அன்று தமிழ்நாடு மின்விநியோகக் கழகம் கோயம்புத்தூர் பகுதியின் தலைமைப் பொறியாளர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், தானியங்கி முறையில், இந்த 12kw மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களை, III-A(1) பிரிவுக்கு மாற்றுவது சாத்தியமில்லை என்றும்,தொழில் நிறுவனங்கள் ஒவ்வொன்றும், இந்த மாற்றத்திற்காகத், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அப்படி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு, விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்துதான் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தபடி, அப்போதிருந்தே இந்தக் கட்டண மாற்றம் நடைமுறைக்கு வந்ததாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். 12kw மின்சுமைக்கு அதிகமாகப் பயன்படுத்தும் நிறுவனங்களை அதிக கட்டணப் பிரிவுக்கு மாற்ற, மென்பொருள் மூலமாகத் தானாகவே மாற்றம் செய்ய இயலும்போது, குறைந்த கட்டணப் பிரிவுக்கு மாற்றம் செய்வதற்கு ஏன் தொழில் நிறுவனங்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது தி.மு.க., அரசு? வெறும் கண்துடைப்புக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, தொழில்துறையினரை ஏமாற்றுவதுதான் நோக்கமா?12 kW மற்றும் அதற்கும் குறைவான மின்சுமைகளைக் கொண்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அதிக கட்டணத்தை வசூலித்து வந்திருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம். 12kw மற்றும் அதற்குக் குறைவான மின்சுமையைப் பயன்படுத்தும் இந்த நிறுவனங்கள் அனைத்தையும், உடனடியாக III-B வகையிலிருந்து, III-A(1) வகைக்கு மென்பொருள் வாயிலாக, தானியங்கி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், இதற்கான அறிவிப்பு வெளிவந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்த நிறுவனங்களிடம் வசூலித்த அதிகப்படியான கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும், தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Kasimani Baskaran
ஜன 28, 2025 07:40

தேர்தல் முடிந்து மூன்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது - தீம்க்காவின் வாக்குறுதிகள் ஒன்று கூட உருப்படியாக நிறைவேற்றப்படவில்லை. அவற்றைப்பற்றி பிரபலப்படுத்தினாலேயே தீம்க்கா கலகலத்துப்போகும்.


pmsamy
ஜன 28, 2025 06:58

கூலிக்கு கைத்தற்ற ....


தாமரை மலர்கிறது
ஜன 28, 2025 02:23

கமிஷன் வாங்காமல் திமுக எதையும் செய்ததில்லை.


Ramesh Sargam
ஜன 27, 2025 21:10

திமுகவினருக்கு வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி பழக்கமே இல்லை. பழக்கமே இல்லாத ஒன்றை நாம் அவர்களிடம் எதிர்பார்க்கலாமா...??? மதுவை ஒழிப்போம் என்றார்கள். ஒழித்தார்களா? நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றார்கள். ரத்து செய்தார்களா?


V வைகுண்டேஸ்வரன்
ஜன 27, 2025 20:44

//அறிவாலய வாட்ச்மேனுக்கு இன்று வார விடுமுறை போல தெரியுது./ காரைக்குடி ஆனந்தன் // - அண்ணாமலையின் கருத்து பற்றிய இந்த செய்திக்கும் காரைக்குடி ஆனந்தன் போட்டிருக்கும் போஸ்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அர்த்தமாவது இருக்கிறதா? அறிவாலயம் வாசலில் நின்று அண்ணாமலை பேசினாரா? என்னது இது?? இவர்கள் எல்லாம் என்னிக்கு காமன் சென்சுடன் கருத்து போடப் போகிறார்கள்?? இவர் மாதிரி ஆட்கலுக்கு எப்போ அறிவு வரும்??


veera
ஜன 28, 2025 09:32

ஓ அங்கே அடிச்சா இங்கே வலிக்குதா.... பேஷ் ...பேஷ்


T.sthivinayagam
ஜன 27, 2025 20:07

நூருநாள் வேலைதிட்ட தொழிலாளர்களின் பணத்தை விடுவிக்க அண்ணாமலை சார் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்


திகழ்ஓவியன்
ஜன 27, 2025 18:37

GST வரி விதித்து சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர் அனைவரையும் படுகுழியில் தள்ளி விட்டு இப்ப அரிட்டா பட்டியில் செய்த வேலை இங்கும் செய்கிறார்


அப்பாவி
ஜன 27, 2025 18:15

பத்து வருஷமாச்சு பாஞ்சி லட்சம், ரெண்டு கோடி வேலை. அல்லாருக்கும் வூடு அஞ்சு வருஷமாச்சு. எங்கே போய் சாட்டையாலடிச்சுக்க?


guna
ஜன 27, 2025 18:13

சீமான் பேச்சை கேட்டவுடன் மண்புழு போல மண்ணுக்குள் போயிடு......அண்ணாமலை.பேரை கேட்டா வெளிய வந்து ஒரு மொக்கை கருத்தை போடவெண்டியது ....உன் பிழைப்பு ரொம்ப பாவம் பெரியவரே


V வைகுண்டேஸ்வரன்
ஜன 27, 2025 17:25

//இவரு தான் MP யும் கிடையாது, MLA வும் கிடையாது. அப்புறம் எதுக்கு இவ்வளவு அலட்டிக்கறார்?? இருக்கிற நாலு பாஜக MLA க்கள் ஏன் சத்தமே போடறதில்லை. அவங்க ஏதாவது அறிக்கை வுட்டா, கட்சியிலிருந்து தூக்கிருவாங்களோ??// veera இதுக்கு பதில் போட வக்கில்லை, என்னை விமர்சனம் செய்வது ஏன்? வானதி நயினார் தவிர மீதி 2 பாஜக MLA க்களின் பேர் என்ன? அவங்க என்ன பண்ணறாங்க? கேட்டு இங்கே பதிவிடுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை