உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவர் இன்றி வாரம் ஒரு உயிர் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்; அண்ணாமலை

மருத்துவர் இன்றி வாரம் ஒரு உயிர் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்; அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று பா.ஜ.,தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி, அவசர சிகிச்சைக்காக வந்த பாண்டித்துரை என்பவர், மருத்துவர் இல்லாததால், முதலுதவி கூடக் கிடைக்காமல் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=djkvz9te&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகம் முழுவதுமே, சுகாதாரத் துறையில், உயிரிழப்புகள் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படைக் காரணம் என்னவென்றால், போதிய அளவு மருத்துவர்கள் நியமனம் செய்யாமல் இருப்பது தான். தமிழகம் முழுவதும், 1,467 மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது. அனைத்து அரசுத் துறைகளிலுமே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது ஒரு புறம் இருக்க, பொதுமக்கள் உயிருக்குப் பொறுப்பான சுகாதாரத் துறையில் கூட, போதிய மருத்துவர்களை நியமிக்காமல் இருப்பது, அரசு மருத்துவமனைகளை நாடும் ஏழை, எளிய பொதுமக்கள் உயிரை தி.மு.க., அரசு கிள்ளுக்கீரையாகப் பார்க்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதைக் கவனிப்பதை விட, சுகாதாரத் துறையில் அப்படி என்ன முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர்? உயிர்கள் பலியான பிறகு, நீங்கள் ஆடும் நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sampath Kumar
ஜன 07, 2025 17:01

இருந்தா 2 போய்க்கொண்டு இருந்தது இப்போ 1 பரவாயில்லை


G Mahalingam
ஜன 07, 2025 14:11

கடந்த இரண்டு வருடங்களாக ....


Madras Madra
ஜன 07, 2025 14:00

நீங்க வேற ஏங்க ? நாங்க இப்ப மக்களை மடை மாற்றம் செய்யவே நேரம் இல்லாம முக்கிகிட்டுருக்கோம் புதுசு புதுசா ஆரம்பிக்கிறீங்க கொஞ்சம் தெளிய வச்சி செய்யிங்க


THANKS TOUNIVERSE
ஜன 07, 2025 13:44

மூடரே


N.Purushothaman
ஜன 07, 2025 13:29

இது திராவிட மாடல் ஹே ...சமூக நீதி ஹே ....


பல்லவி
ஜன 07, 2025 13:22

இலண்டனில் எல்லாம் போச்சு போல


Dhurvesh
ஜன 07, 2025 13:16

சரி நீ தலைவரா இல்லை கடை மட்ட தொண்டனா, இல்லை தலைவர் ஆக இப்படி புளுகி கொண்டு இருக்கிய்யா


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 07, 2025 13:26

நீ எங்க இருக்க....


veera
ஜன 07, 2025 13:33

உண்மைய சொன்னா தொடை நடுங்குதா உனக்கு கொத்தடிமை ஏ


Ramesh Sargam
ஜன 07, 2025 13:14

திருட்டு ரயில் ஏறி வந்தவருக்கு ஊர் முழுக்க சிலைவைக்க பணம் இருக்கு, பதவி பலம் இருக்கு. ஆனால் வாக்களித்த மக்களுக்கு சிகிச்சை செய்ய மருத்துவர்கள் இல்லை. என்னவொரு கேவலமான அரசு நடத்துகிறார்


Dhurvesh
ஜன 07, 2025 13:54

திருட்டு ரயில் எப்படி தெரியும், உன் குடுமபத்தினர் சொன்னார்களோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை